For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 3 சட்டங்கள்.. சபாநாயகருக்கான அதிகாரங்கள்!

இன்று கர்நாடக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விதி எண் 340 மற்றும் விதி எண் 346 ஆகியவை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 3 சட்டங்கள்.. வீடியோ

    பெங்களூர்: இன்று கர்நாடக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விதி எண் 340 மற்றும் விதி எண் 346 ஆகியவை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதேபோல் இந்திய அரசியலமைப்பு சட்டம் 189 (1)ம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

    Karnataka Assembly Floor Test: 3 laws which will play major role today in bench

    இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.

    இந்த பரபரப்பான நிலையில் தற்போது கர்நாடக சட்டசபையில் பின்பற்றப்படும் இரண்டு விதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. விதி எண் 340 மற்றும் விதி எண் 346 ஆகியவை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதேபோல் இந்திய அரசியலமைப்பு சட்டம் 189 (1)ம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் போப்பையா இதனால் முக்கியத்துவம் பெறுகிறார்.

    விதி எண் 340ன் படி தற்காலிக சபாநாயகர் கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம், இதற்கு சபையில் இருக்கும் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம் இல்லை. எம்எல்ஏக்களிடம் இந்த முடிவு குறித்த தகவலை அளித்துவிட்டு, அவர்களிடம் கருத்தை கேட்டுவிட்டு கடைசியில் தற்காலிக சபாநாயகரே முடிவை எடுக்கலாம்.

    விதி எண் 346ன் படி, தற்காலிக சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்தலாம், உச்ச நீதிமன்றம் கைகளை தூக்கி வாக்கெடுப்பு நடத்த கூறி இருந்தாலும், தற்காலிக சபாநாயகர் இந்த விதியை பயன்படுத்தி குரல் வாக்கெடுப்பு நடத்த அழைக்கலாம். ஆனால் அதில் முடிவு வந்த பின் கட்சிகள் எதிர்த்தால், சபாநாயகர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் கைகளை தூக்கி வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    கடைசி நேரத்தில் பாஜக கட்சிக்கு 110 எம்எல்ஏக்கள் வந்து, 1 எம்எல்ஏ ஆதரவு கிடைக்கவில்லை என்றால் சபாநாயகர் வாக்களிக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டம் 189 (1)ன் படி கடைசி நேரத்தில் சபாநாயருக்கு வாக்களிக்கும் அதிகாரம் வழங்கப்படும். இந்த மூன்று அதிகாரங்கள் இன்று சட்டசபையில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

    English summary
    All eyes would be on Karnataka as the crucial trust vote would be held today. Rule 340 of the Karnataka Assembly Rules would be in focus as the decision of the House would be decided by means of a question put by the Speaker on the motion made by a member. In all likelihood the Speaker, would apply Rule 346 by which voting would be done through a voice vote with the members says either ‘ayes’ or ‘nay.’ The Speaker would then determine the outcome on the voice vote. In case his decision is challenged then he would clear the lobbies, close the doors and then put the motion to a voice vote again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X