கர்நாடகா சட்டசபையில் சாவர்க்கர் படமா? சித்தராமையா தலைமையில் காங். எம்.எல்.ஏக்கள் போராட்டம்!
பெலகாவி: கர்நாடகா சட்டசபையில் இந்துத்துவா சிந்தனையாளர் சாவர்க்கர் படம் இடம் பெற எதிர்த்து பெலகாவியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா- மகாராஷ்டிரா இடையேயான எல்லை பிரச்சனை உச்சகட்டமாக நிலவி வருகிறது.

கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் மராத்தி மொழி பேசுகிற பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால பிரச்சனை. தற்போது இந்த விவகாரம் பற்றி எரியும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் இரு மாநில எல்லைகளில் பதற்றமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எல்லை பகுதிகளை திருப்தி படுத்தும் வகையில் குளிர்கால சட்டசபை கூட்டத் தொடரை பெலகாவியில் நடத்துவது வழக்கம். தற்போது கர்நாடகா சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் பெலகாவி சட்டசபையில் நடைபெறுகிறது. இந்த சட்டசபையில் இன்று ஒருநாள் மட்டும் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நடைபெறுகிற நிலையில் சட்டசபையில் சாவர்க்கர் படத்தை பாஜக அரசு வைத்துள்ளது.
கர்நாடகா சட்டசபையில் சாவர்க்கர் படத்தை வைக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாவர்க்கர் படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தலைமையில் காங்.எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications