For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அமைச்சர் கொடுத்த பிரஷர்... பதவியை தூக்கி எறிந்தார் பெண் டிஎஸ்பி அனுபமா!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் டிஎஸ்பி அனுபமா ஷெனாய் என்பவர் தாங்க முடியாத அரசியல் அழுத்தங்கள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுபமா ஷெனாய், பெல்லாரி மாவட்டம் குட்லிகி சரகத்தைச் சேர்ந்த டிஎஸ்பயாக இருந்து வந்தார். நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ராகு காலம் தொடங்கியது, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பி.டி. பரமேஷ்வர் நாயக் மூலமாக.

Karnataka DSP Anupama Shenoy resigns

அமைச்சர் பரமேஷ்வர் நாயக் இவருக்குப் போன் செய்துள்ளார். ஆனால் போனை டிஎஸ்பி அனுபமா எடுக்கவில்லை. நிராகரித்து விட்டார். இதனால் கோபமடைந்த நாயக் அனுபமாவை டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார். இந்த செயலுக்கு கடும் கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து அரசு தலையிட்டு இடமாற்றத்தை ரத்து செய்தது.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று குட்லிகி நகரில் 3 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தார் அனுபமா ஷெனாய். அவர்கள் மூன்று பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சிலர் வந்து அங்கு அனுபமாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பின்னணியில் அனுபமா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். கடிதத்தை மாவட்ட எஸ்.பி. சேத்தனுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அவரது கடிதம் வந்துள்ளது. என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நான் இன்னும் பார்க்கவில்லை. நடந்த சம்பவம் என்னவென்றால், அம்பேத்கர் பவனுக்குச் செல்லும் சாலையில் உள்ள மதுக் கடையை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. அந்தப் பணி நடந்தால் அம்பேத்கர் பவனுக்கு செல்லும் சாலையின் அகலம் குறையும் என்று தலித் தலைவர்கள் சிலர் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மதுக் கடையின் உரிமையாளரை அழைத்து கடை விரிவாக்கத்த நிறுத்துமாறு டிஎஸ்பி அனுபமா உத்தரவிட்டார். ஆனால் உரிமையாளர் ரவி அதைக் கேட்கவில்லை. இதையடுத்து ரவி மற்றும் 2 பேரை அனுபமா கைது செய்துள்ளார் என்றார் அவர்.

அரசியல் நெருக்கடி காரணமாகவே அனுபமா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

English summary
Karnataka DSP Anupama Shenoy has resigned her job amidst alleged political pressure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X