கர்நாடகா: நாளை மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பேன்.. எடியூரப்பா நம்பிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நாளை கர்நாடகாவில் தேர்தல் முடிவு வந்த பின் நேராக சென்று பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுப்பேன் என்று பாஜகவின் எடியூரப்பா நம்பிக்கையாக பேட்டியளித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 15ம் தேதி) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது..

Karnataka: Will meet Modi tomorrow and invite him for the my swearing-in ceremony says, Yeddyurappa

கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் காங்கிரஸ், பாஜக என யார் அதிக இடங்களை பிடித்தாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி யாருக்கு ஆதரவு தருகிறதோ அவர்களுக்கே, ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் பாஜக, காங்கிரஸ் இரண்டும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் இருக்கிறது.

ஆனால் இத்தனை கருத்து கணிப்புகளுக்கும் மத்தியிலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வேறு விதமான நம்பிக்கையில் இருக்கிறார். பாஜக எப்படியும் 150க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பே இவர் இதில் உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது எடியூரப்பா இன்னும் நம்பிக்கையா பேசியுள்ளார். அதன்படி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் உடனடியாக விமானமே மூலம் டெல்லி செல்வேன், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து நான் முதல்வராக பதவியேற்கும் விழாவிற்கு அழைப்பு விடுப்பேன் என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பும் இதேபோல் பதவி ஏற்பு விழா குறித்து இவர் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka: Will meet Modi tomorrow and invite him for my swearing-in ceremony says, Yeddyurappa amidst all the Post poll confusions.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற