நாங்கள் எந்த தவறுமே செய்யவில்லை: கதுவா சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

  கதுவா சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ

  ஸ்ரீநகர்: கதுவாவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரும் தாங்கள் எந்த தவறும் செய்யவலில்லை என்று தெரிவித்துள்ளனர்.

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமியை கடத்தி போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் மைனர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  Kathua rape case: Accused plead not guilty

  இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை துவங்கியது. குற்றவாளிகளோ தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், நார்கோ சோதனைக்கு உத்தரவிடுமாறும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

  ஜம்மு காஷ்மீர் போலீசார் குற்றப்பத்திரிகையின் நகல்களை தங்களிடம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

  நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இந்த வழக்கு நியாயமான முறையில் நடக்க வேண்டும் எனில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே தான் நடக்க வேண்டும் என சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  சிறுமியின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் தீபிகா ரஜாவத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவருக்கும், சிறுமியின் குடும்பத்தாருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Eight men including the juvenile who are accused of abducting, drugging and raping an eight-year-old girl in Kathua have told the judge that they are not guity. They have even asked the judge to order a narco analysis test.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற