For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் ”உபரி” மின்சாரத்தை கேரளாவிற்கு வழங்குங்கள்- ஜெயலலிதாவிற்கு உம்மன் சாண்டி கடிதம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி, உபரி மின்சாரத்தை கேரளாவிற்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உம்மன் சாண்டி எழுதியுள்ள கடிதத்தில், "கேரளாவில் பருவமழை தாமதம், மத்திய மின்சார ஒதுக்கீட்டில் குறைவு, மின்நிலையங்களில் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது.

Kerala seeks TN help to tide over power shortage

பற்றாக்குறை சரியாகும் வரை தனியார் மின்நிலையங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க முடிவுசெய்துள்ளோம்.

இந்த சூழ்நிலையில் கேரளாவில் மின்சார ஒழுங்குமுறையால் மின்வெட்டை அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழ்நாட்டில் இருந்து மின்சாரத்தை வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை கேரளாவுக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
With the state reeling under acute power shortage, Kerala Government has sought the help of Tamil Nadu to tide over the situation. Chief Minister Oommen Chandy in a letter to his Tamil Nadu counterpart Jayalalitha sought supply of the extra power the neighbouring state was producing out of wind energy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X