For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாட்ஸ் அப்பில் ஆபாச படம்... ஏ.டி.ஜி.பி. மீது சரிதா நாயர் புகார்- விசாரணை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: வாட்ஸ் அப் வாயிலாக தனது ஆபாச காட்சிகளைப் பரப்பியது ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் தான் என சரிதாநாயர் அளித்துள்ள புகாரை டிஜிபி கிருஷ்ணமூர்த்தி விசாரிப்பார் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளி வந்திருக்கிறார் சரிதாநாயர். சமீபத்தில் இவர் சம்பந்தப்பட்ட ஆபாசப் படக் காட்சிகள் வாட்ஸ் அப் மூலமாக மாநிலம் முழுவதும் பரவியது.

இது தொடர்பாக சரிதாநாயர் அளித்த புகாரின் அடிப்படையில் பத்தனம்திட்டா கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அதன்படி, சரிதாநாயரின் ஆபாசப் படக்காட்சிகளைப் பரப்பியவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் டிஜிபி பாலசுப்பிரமணியம் அலுவலகத்திற்கு சென்ற சரிதாநாயர், அவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அப்புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

கைது...

கைது...

கேரள மாநிலத்தில் தென் மண்டல ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் பத்மகுமார், முன்பு திருவனந்தபுரம் சரக ஐ.ஜி.யாக இருந்த போது தான் நான் கைது செய்யப்பட்டேன்.

பறிமுதல்...

பறிமுதல்...

அப்போது என்னிடம் இருந்து 7 செல்போன்கள், 2 லேப் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கோர்ட்டில் ஒப்படைக்கும் போது ஒரு லேப்டாப்பும், 4 செல்போன்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது.

ஆபாசக் காட்சிகள்...

ஆபாசக் காட்சிகள்...

3 செல்போன்களும், ஒரு லேப்டாப்பும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படவில்லை. அந்த லேப்டாப்பில் தான் என்னுடைய ஆபாச காட்சி இருந்தது.

ஐ.ஜி. தான் காரணம்...

ஐ.ஜி. தான் காரணம்...

எனவே அது வெளியில் கசிந்து வாட்ஸ்அப்பில் பரவ அப்போதைய போலீஸ் ஐ.ஜி. பத்மகுமார் தான் காரணமாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன்.

உரிய விசாரணை தேவை...

உரிய விசாரணை தேவை...

இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை...

விசாரணை...

இந்நிலையில், சரிதாநாயர் புகார் தொடர்பாக டிஜிபி கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்துவார் என அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

English summary
Director General of Police M.N. Krishnamoorthy will probe the complaint of solar panel scam accused Saritha Nair against Additional Director General of Police K. Padmakumar, Kerala Home Minister Ramesh Chennithala said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X