For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: பிரபலங்கள் மோதும் ரணகள தொகுதிகள்

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் பிரபலங்கள் மோதும் தொகுதிகள் பொதுவாக கவனத்தை ஈர்க்கக் கூடியவை. இந்த தேர்தலில் வழக்கமான அரசியல் கட்சிகளுடன் ஆம் ஆத்மியும் பல பிரபலங்களை களமிறக்கியிருப்பதால் தொகுதிகளில் அனல் பறக்கிறது.

லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள், முன்னாள் பிரதமர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரின் தொகுதிகள் மட்டுமே கவனத்தை ஈர்க்கக் கூடியவையாக இருந்து வந்தன. நடப்பு லோக்சபா தேர்தலிலோ அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் களத்தில் குதித்து பல தொகுதிகளை பிரபலங்களின் தொகுதிகளாக்கிவிட்டனர்.

அப்படியான பிரபலங்கள் மோதும் தொகுதிகளைப் பற்றி பார்க்கலாம்..

வாரணாசியில் மோடி- கேஜ்ரிவால்

வாரணாசியில் மோடி- கேஜ்ரிவால்

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோராவிலும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், மோடியை எதிர்த்து களம் இறங்குகிறார். அத்துடன் இந்த தொகுதியில் கணிசமான ஆதரவு பெற்ற முக்தார் அன்சாரியும் களமிறங்குகிறார்.

2 தொகுதியில் முலாயம்சிங்

2 தொகுதியில் முலாயம்சிங்

மோடியைப் போலவே பிரதமர் கனவில் இருக்கும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மணிபுரி மற்றும் ஆசம்கார் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனால் இந்த 2 தொகுதிகளும் கவனத்தை ஈர்க்கிறது.

அமேதி...

அமேதி...

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி அமேதி. இந்த தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறது ஆம் ஆத்மி. அக்கட்சியின் குமார் விஸ்வாஸ்தான் வேட்பாளர். அவர் கடந்த 2 மாதங்களாக அமேதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

ரேபரேலி

ரேபரேலி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் தொகுதி ரேபரேலி. ஆனால் இந்த தொகுதியில் பிற கட்சிகள் பிரபலங்களை வேட்பாளர்களாக இதுவரை களமிறக்கவில்லை.

பெங்களூர் தெற்கு தொகுதி..

பெங்களூர் தெற்கு தொகுதி..

ஆதார் அட்டையின் நாயகன் என வருணிக்கப்படும் நந்தன் நிலகேனி, பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்குகிறார். அவர் மோதுவது இதே தொகுதியில் 5 முறை வென்ற பாரதிய ஜனதாவின் அனந்த்குமாரை எதிர்த்து.. இதனால் இதுவும் பரபரப்பான தொகுதியாக இருக்கிறது.

பீகாரில் லாலு மகள்..

பீகாரில் லாலு மகள்..

பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி, பாடலிபுத்திரா தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து லாலுவின் முன்னாள் நெருங்கிய சகாவான ராம் கிருபால் யாதவ், பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பவன்குமார் பன்சால்..

பவன்குமார் பன்சால்..

சண்டிகரில் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை குல் பனாக் ஆம் ஆத்மியின் வேட்பாளராகவும், மற்றொரு நடிகை கிரோன் கேர் பாஜக வேட்பாளராகவும் கோதாவில் குதித்துள்ளனர்.

வி.கே.சிங்..

வி.கே.சிங்..

நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் காசியாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மியின் ஷாஜியா களம் இறங்குகிறார். இதனால் காசியாபாத் தொகுதியும் கவனத்தைப் பெற்றுள்ளது.

காந்தி பேரன்..

காந்தி பேரன்..

கிழக்கு டெலியில் மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியை ஆம் ஆத்மி களமிறக்கியுள்ளது. அவர் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தை எதிர்த்து போட்டியிடுகிறார்.

பத்திரிகையாளர் ஆஷிஸ்

பத்திரிகையாளர் ஆஷிஸ்

புதுடெல்லி தொகுதியில் காங்கிரஸின் அஜய் மக்கானை எதிர்த்து பாஜகவின் மீனாஷி லெகியும் ஆம் ஆத்மி சார்பில் பத்திரிகையாளர் ஆஷித் கேதானும் களமிறங்கியுள்ளனர்.

கபில்சிபலை எதிர்க்கும் ஜேர்னலிஸ்ட்

கபில்சிபலை எதிர்க்கும் ஜேர்னலிஸ்ட்

சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய அமைச்சர் கபில்சிபலை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் பத்திரிகையாளர் அஸுதோஸும் பாஜக சார்பில் டாக்டர் ஹர்ஷவர்தனும் களமிறங்குகின்றனர்.

அசாருதீன்..

அசாருதீன்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், ராஜஸ்தானின் சவாய் மோதாபூரில் இம்முறை காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஜெயபிரதா..

ஜெயபிரதா..

சமாஜ்வாடி கட்சி எம்.பியாக இருந்த ஜெயபிரதா திடீரென அஜீத்சிங்கின் கட்சியில் சேர்ந்த கையோடு இம்முறை பிஜினோர் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அமர்சிங்

அமர்சிங்

இதேபோல் சமாஜ்வாடி கட்சியை விட்டு தாவிய அமர்சிங் இம்முறை அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் சார்பில் பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், குர்கான் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சசி தரூர்..

சசி தரூர்..

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சசி தரூர் போட்டியிட அவரை எதிர்த்து இடதுசாரிகளும் பாஜகவின் ஓ. ராஜகோபாலும் களமிறங்குகின்றனர்.

அனிதா பிரதாப்

அனிதா பிரதாப்

கேரளாவின் எர்ணாகுளத்தில் மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க அவரை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளராக பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போட்டியிடுகிறார்.

 நேதாஜி உறவினர்..

நேதாஜி உறவினர்..

மேற்கு வங்க மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தைச் சேர்ந்த சுகதா போஸை ஜாதவ்பூர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளராக நிறுத்தியுள்ளார் மமதா பானர்ஜி.

பூட்டியா..

பூட்டியா..

பிரபல கால்பந்து வீரர் பூட்டியாவை டார்ஜிலிங் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளராக களமிறக்கியுள்ளார் மமதா பானர்ஜி. அங்கு பாஜக வேட்பாளராக எஸ்.எஸ். அலுவாலியா போட்டியிடுகிறார்.

நாக்பூரில் நிதின் கத்காரி

நாக்பூரில் நிதின் கத்காரி

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாரதிய ஜனதா தலைவர் நிதின் கத்காரி போட்டியிடுகிறார்.

அமிர்தசரஸில் அருண் ஜேட்லி..

அமிர்தசரஸில் அருண் ஜேட்லி..

ராஜ்யசபா எம்.பியான பாஜகவின் அருண் ஜேட்லி முதல் முறையாக லோக்சபா தேர்தலில் குதித்துள்ளார். அவர் பஞ்சாபின் அமிர்தசரஸ் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார்.

English summary
Every Lok Sabha election has its own fair share of hotly contested seats. Some obscure constituencies hit national headlines because a big leader tries his or her luck from there. Sometimes oddballs contest from such seats making it national news. In the current Lok Sabha elections, there are at least 25 such seats across India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X