கட்டுப்படுத்த முடியாத கூட்டம்! காரை விட்டு இறங்க மறுத்த கிருஷ்ணகுமார் குன்னத்.. பாடகி பரபரப்பு தகவல்
கொல்கத்தா: பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரியத்திற்கு வெளியே இருந்த கூட்டத்தை பார்த்த அவர் காரிலிருந்து இறங்க மறுத்ததாக அங்கிருந்த பாடகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் இதுவரை 3500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்களை பாடிவருகிறார். தனது காதல் பாட்டால் 90 கிட்ஸை கிறங்கடித்தவர்.
தமிழ் திரைப்படங்களில் இவர் 66 பாடல்களை பாடியுள்ளார். மின்சார கனவு படத்தில் வரும் ஸ்டாபெர்ரி கண்ணே பாடல் மிகவும் பிரபலம். அது போல் அன்னியன் படத்தில் வரும் அண்டங்காக்கா கொண்டைகாரி பாடலும் ரசிகர்களை கவர்ந்தது.

உடல்நிலை மோசம்
இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் கடந்த மே 31 ஆம் தேதி குன்னத் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிரிழப்பு
அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவால் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது நினைவுகளை இசையமைப்பாளர்கள் பகிர்ந்தனர். மேலும் அனைவரது உயிரிலும் உயிராக கலந்து விட்ட குன்னத் மறைவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காயங்கள்
இந்த நிலையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏசி இயந்திரம் வேலை செய்யவில்லை என கூறிய குன்னத் தனது முகத்தை டவலால் துடைத்துக் கொண்டே இருந்தார். மேலும் 2500 பேர் மட்டுமே பங்கேற்கும் ஆடிட்டோரியத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது முகத்திலும் தலையிலும் காயங்கள் இருந்ததால் இயற்கைக்கு மாறான மரணம் என்றே கொல்கத்தா போலீஸார் வழக்குப் பதிவு செய்துளளனர்.

பிரேத பரிசோதனை
இந்த நிலையில் அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், அவரது இதயத்தின் இடது புற பிரதான ரத்தக் குழாயில் 80 சதவீத அடைப்புகள் இருந்தன. அது தவிர, பல்வேறு ரத்தக் குழாய்களில் சிறிய அடைப்புகள் இருந்தன. அவருக்கு இதய நோய் இருந்துள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்காமல் அஜாக்கிரதையாக இருந்துள்ளார்.

நடனம் ஆடிய கேகே
மேலும் பாட்டு பாடும் போது நடனமும் ஆடியுள்ளார். ரசிகர்களின் ஆரவாரத்தால் உணர்ச்சிவசப்பட்ட போது அவருக்கு இதயத்தில் திடீரென ரத்த ஓட்டம் சிறிது நேரத்திற்கு தடைபட்டிருக்கலாம். ஒழுங்கற்ற இதய துடிப்பை உண்டாக்கி, பின் மாரடைப்பை ஏற்படுத்தி இருக்கும். அவர் மயங்கி விழுந்த உடனேயே சிபிஆர் எனப்படும் இதயம், நுரையீரலை இயங்கச் செய்யும் அவசர உதவி சிகிச்சையை செய்திருந்தால அவர் உயிர் பிழைத்திருக்கக் கூடும்.

வாயுத் தொல்லைக்கு மருந்து
அவர் வாயுத் தொல்லைக்காக மருந்து உட்கொண்டிருந்துள்ளார். எனவே இதய வலியை அவர் வாயுத் தொல்லை என கருதி சிகிச்சை எடுக்காமல் இருந்திருக்கக் கூடும் என மருத்துவர் தெரிவித்தார். இந்த நிலையில் கேகே கலந்து கொள்வதற்கு முன்னர் அந்த ஆடிட்டோரியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகியான சுபலட்சுமி தே அளித்த பேட்டி ஒன்றில், ஆடிட்டோரியத்திற்கு வெளியே இருந்த கூட்டத்தை பார்த்ததும், கிருஷ்ணகுமார் குன்னத் காரை விட்டு இறங்க விரும்பவில்லை.

செல்பி
இத்தனை கூட்டத்தை பார்த்ததும் அவர் காரை விட்டு இறங்கவே மாட்டேன் என்றார். அவருடைய கிரீன் ரூமிற்கு வெளியே ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. யாருக்கும் அந்த அறை செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் எனக்கு அனுமதி கிடைத்தது. நான் உள்ளே சென்ற போது அவரது உடல்நிலை சரியாகத்தான் இருந்தது. என்னிடம் இரு நிமிடங்கள் பேசினார். அவருடன் செல்பி எடுத்துக் கொண்டேன்.
Recommended Video

அசவுகரியம்
அப்போது அவரது உடல்நிலையில் எந்த அசவுகரியமும் தோன்றியதாக எனக்கு தெரியவில்லை. மேடையில் அதிக விளக்குகள் இருந்தது, கூட்டமும் அதிகமாக இருந்ததால் அவர் தனக்கு வியர்க்கும் என கருதி விளக்குகளை அணைக்க சொன்னார். அவர் முதலிலேயே தனக்கு பதற்றமாக இருப்பதாக சொல்லியிருந்தால், நாங்கள் நிகழ்ச்சியை நிறுத்தியிருப்போம் என தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications