லக்கிம்பூர் படுகொலை: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்- மத்திய அமைச்சர் மகன் முதன்மை குற்றவாளி!
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதி படுகொலை செய்த வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா முதன்மை குற்றவாளி எனவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டி உள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். லக்கிம்பூருக்கு அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த அக்டோபர் 3-ந் தேதி வருகை தந்தார்.

லக்கிம்பூர் படுகொலை
அவருக்கு கறுப்புக் கொடி காட்டும் வகையில் விவசாயிகள் அமைதியாக பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் மீது வேண்டும் என்றே சொகுசு கார் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து இறந்தனர். அப்போதும் ஆத்திரம் தீராத கும்பல் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் மேலும் 4 பேர் மரணம் அடைந்தனர். லக்கிம்பூர் வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

மத்திய அமைச்சர் மகன் கைது
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த படுகொலை சம்பவத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு உ.பி.யில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது. லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அதேபோல் வன்முறையில் ஈடுபட்டதாக விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் அழுத்தம்
இச்சம்பவத்தால் அஜய் மிஸ்ரா, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் லக்கிம்பூர் படுகொலை திட்டமிட்ட சதி என்றும் விசாரணை குழு தெரிவித்தது. இதனை முன்வைத்து அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின.

மத்திய அமைச்சர் மகன் முதல் குற்றவாளி
இந்நிலையில் லக்கிம்பூர் படுகொலை வழக்கில் போலீசார் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதில் லக்கிம்பூரில் மொத்தம் 8 பேர் கொலல்ப்பட்ட சம்பவத்தில் முதன்மை குற்றவாளி மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான்; அவர்தான் சம்பவ இடத்தில் இருந்து வன்முறைகளை நிகழ்த்தினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications