For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண் முன்னே டிராக்டர் ஏற்றி கொன்றார்கள்.. பைனான்ஸ் அதிகாரிகள் பற்றி விவசாயி குடும்பம் வாக்குமூலம்

கடனை திருப்பி தராததால் உத்தர பிரதேச விவசாயி ஒருவர் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டிரேக்டர் ஏற்றிக்கொள்ளப்பட்ட விவசாயி- வீடியோ

    லக்னோ: தமிழகம் முழுக்க கந்து வட்டி கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு அனுமதி பெற்ற பைனான்சிங் நிறுவனங்களே நிறையே மோசடிகளை செய்து வருகிறது.

    அந்த நிறுவனங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட அங்கு கட்டப்பஞ்சாயத்து நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரு லக்னோ விவசாயி இதனால் மரணம் அடைந்து இருக்கிறார்.

    பைனான்ஸ் அதிகாரிகளே அவரை டிராக்டர் ஏற்றி கொலை செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அந்த குடும்பம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறது.

    வறுமை

    வறுமை

    கயான் சந்திரா என்ற அந்த விவசாயி குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர் இருக்கிறார்கள். இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஏழு பேரில் ஐந்து பேர் பெண்கள் குழந்தைகள். அதில் ஒருவர் வாய் பேச முடியாதவர். கடந்த பல வருடங்களாக வறுமையில் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

    டிராக்டர்

    டிராக்டர்

    அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிராக்டர் வாங்க லோன் எடுத்து இருக்கிறார். 1.25 லட்சம் பணத்தை இவருக்கு தனியார் பைனான்சிங் நிறுவனம் ஒன்று கொடுத்து இருக்கிறது. அதை வைத்து டிராக்டர் வாங்கி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் கடனில் 35 ஆயிரம் ரூபாய் அடைத்தும் இருக்கிறார்.

    சண்டை

    சண்டை

    நேற்று மீதி தொகையை கேட்டு அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர். இவர் ஒரு வாரத்தில் மீதி பணத்தை கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதை கேட்காத அதிகாரிகள் அவரிடம் இருந்து டிராக்டர் சாவியை பிடுங்கி வண்டியை எடுத்து இருக்கிறார்கள். இன்னொரு அதிகாரி அந்த விவசாயிடம் சண்டையிட்டு இருக்கிறார்.

     மரணம் அடைந்தார்

    மரணம் அடைந்தார்

    அவர்கள் டிராக்டரை எடுத்தவுடன் இந்த அதிகாரி விவசாயியை டயருக்கு அடியில் தள்ளிவிட்டு இருக்கிறார். டிராக்டர் ஏறி சம்பவ இடத்திலேயே அந்த விவசாயி மரணம் அடைந்துள்ளார். தற்போது அந்த அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.

     கண்ணுக்கு எதிரே

    கண்ணுக்கு எதிரே

    இந்த கொலை குறித்து அந்த குடும்பம் வாக்குமூலம் அளித்துள்ளது. கயானின் சகோதரர் ''என் கண் முன்னே அவரை டிராக்டரில் தள்ளிவிட்டார்கள். அவரை எழுந்திரிக்க விடாமல் பிடித்துக் கொண்டார்கள். பின் டிராக்டரை ஏற்றி கொலை செய்தார்கள். எங்களையும் தடுக்க விடாமல் பிடித்துக் கொண்டார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    ஓட்டம்

    ஓட்டம்

    கொலையை செய்தது மட்டும் இல்லாமல் அவர்கள் அங்கிருந்து ஓடியும் இருக்கிறார்கள். டிராக்டரையும் எடுத்து சென்றுள்ளனர். இவர் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் தற்போது போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இன்னும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

    English summary
    Loan Recovery Agents from private financier, have killed a farmer for not paying loan in UP. They have crushed him under his Tractor. He got loan to by that tractor few months ago. He has already paid 35 thousand of his 1.5 lakh loan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X