For Daily Alerts
நாளை மறுநாள் முதல் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம்.. விலைவாசி உயரும் அபாயம்
டெல்லி: டீசல் விலை, சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி, வரும் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளதால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றமடைய வாய்ப்பு உள்ளது.

குஜராத்திலிருந்து வரும் ஜவுளி பொருட்கள், இந்தூரிலிருந்து வரும் பூண்டு உள்ளிட்ட பொருட்களின் வருகை தடைபடும் வாய்ப்பு உள்ளது. போராட்டத்திற்கு ஆதராவாக, வட மாநிலங்களுக்கு செல்ல கூடிய லாரிகளுக்கான புக்கிங்கை ஏற்கனவே தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் நிறுத்தியுள்ளது.
நாளை மறுநாள் முதல் தமிழக பகுதிகளுக்கு செல்லக்கூடிய லாரிகளுக்கான புக்கிங்கள் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!