நெகிழ்ச்சி! 70 ஆண்டுகளுக்கு பின் இந்தியா திரும்பும் சிறுத்தைப்புலி.. எங்கிருந்து வருகிறது தெரியுமா?
போபால்: இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென் ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு சீட்டா கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் மீண்டும் சீட்டா விலங்கினம் கம்பீர நடை போட இருக்கிறது.
பதுங்குவது, பாய்வது, தாக்குவது, கொல்வது எனத் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்துகிற விலங்கினம் என்றால் அது சிறுத்தை தான். பூனை இனங்களில் முக்கியமான விலங்கினமாக இது கருதப்படுகிறது. இந்த சிறுத்தையிலும் லெபர்ட், ஜாகுவார், சீட்டா, பூமா என நான்கு வகைகள் உள்ளன.
இதில் சீட்டா என்பது முகம் சிறியதாகவும் வால் பகுதி பெரிதாகவும் இருக்கும். இதேபோல் இதன் கால்கள் மிக பெரிதாக இருப்பதால் அதிவேகத்தில் ஓடும் திறன் படைத்தது. 80-130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் சீட்டா, 100 கிலோ மீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் அடைந்துவிடும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

70 ஆண்டுகளுக்கு பிறகு...
எனவே இது போன்ற விலங்கினங்களை நம் நாட்டில் வளர்ப்பதற்கு இந்திய வனத்துறை ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படாத மாநிலமாக இருந்த சத்தீஷ்கரில் கடந்த 1947-ம் ஆண்டு ஒரு சீட்டா தென்பட்டது. அதன்பிறகு 1952-ல் சீட்டா இந்தியாவில் எங்கும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீட்டாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

குனோ-பல்புர் தேசிய பூங்கா
மத்திய பிரதேசத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயம் சீட்டாவை வரவேற்க முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஆப்பிரிக்க சீட்டாக்களை கண்டம் விட்டு கண்டம் மாற்றும் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான திட்டம் தற்போது தயார் நிலையில் இருந்து வருகிறது. திட்டமிட்டபடி எல்லாம் நடைபெற்றால் அடுத்த மாத துவக்கத்தில் சீட்டா இந்தியாவில் காலடி வைக்கும் என்று வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்காக மத்திய பிரதேசத்தின் சியோபர் மாவட்டத்தில் சுமார் 750 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட குனோ- பல்புர் தேசிய பூங்காவில் சீட்டாவை விடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா கொண்டுவரப்படும்
இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி இந்தியாவிற்குள் சீட்டா கொண்டு வரப்படும் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வனவிலங்கு முதன்மை அதிகாரி பன்வாலிடம், சீட்டா விலங்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்படுமா? அல்லது நமீபியாவில் இருந்து கொண்டு வரப்படுமா? எனக்கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பன்வால், ''தற்போது இருநாடுகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும'' என்றார். தொடர்ந்து அவர் இது குறித்து விவரிக்கவில்லை.

அனைத்து ஏற்பாடுகளும் தயார்
அதேபோல், எத்தனை சீட்டாக்கள் இந்தியா கொண்டு வரப்படும் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும் என மற்றொரு வனத்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் சீட்டாவை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கே.என்.பி வனவிலங்கு சரணாலயத்தில் தயாராக உள்ளதாகவும், 12 முதல்15 சீட்டாக்கள் வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவற்றில் பெண் சீட்டாக்களும் அடங்கும். இருப்பிடம் மாற்றி கொண்டு வரப்படும் விலங்குகள் முதல்கட்டமாக 5 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பாதுகாக்கப்படும் எனவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய மண்ணில் வலம் வருமா சீட்டா?
சீட்டாக்களை கையாள்வதற்காக வனத்துறை அதிகாரிகள் சிலருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. சீட்டாக்களின் குணாதிசயம், ஆக்ரோஷமான நேரத்தில் அவற்றை எப்படி கையாள்வது? என்பன போன்ற பயிற்சிகளையும் வனத்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். இந்திய மண்ணில் சீட்டா வசிப்பதற்கான 90 சதவீத ஏற்பாடுகள் தயராகிவிட்டது. தென் ஆப்பிரிக்கா, நமீபியா நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைகளையும் நிவர்த்தி செய்து தயாராக வைத்து இருக்கிறோம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் சரியாக அமைந்து, சீட்டா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டால், இந்திய மண்ணில் மீண்டும் சீட்டா கம்பீரமாக வலம் வருவதை நாம் காண்டு களிக்கலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications