இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: ஒரு விமானி பலி, 2 பேர் படுகாயம்
மத்திய பிரதேசத்தில் பயிற்சிக்காக புறப்பட்ட 2 விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகின. இதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு விமானிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் 3.0 மற்றும் மிராஜ் 2000 என்ற இரு விமானப்படை விமானங்களும் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.

2 விமானங்கள் விழுந்து விபத்து
இந்தநிலையில் இரு விமானங்களும் புறப்பட்ட சிறிது நேரத்தில் மொரோனே என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. ஒரு விமானம் மொரேனா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. மற்றொரு விமானம் அங்கிருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக நம்பப்படுகிறது. விமானத்தின் சேதம் அடைந்த பாகங்கள் எரிந்து கொண்டிருந்த காட்சிகளும் வெளியாகின.

விமானப்படை உத்தரவு
இரண்டு ஜெட் விமானங்களும் அதிவேக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது நடுவானில் மோதியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் இந்திய விமானப்படை தளபதி வி ஆர் சவுதாரி விளக்கம் அளித்தார். பயிற்சியின் போது இரு போர் விமானங்களும் நடு வானில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகினவா? என்பது தொடர்பாக விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

விமானி பலி
சுகோய் 30 விமானத்தில் இரு விமானிகளும் மிராஜ் 2000 விமானத்தில் ஒரு விமானியும் விபத்தின் போது இருந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான போது இரண்டு விமானிகள் பத்திரமாக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியேறிவிட்டனர். காயத்துடன் தப்பிய இரண்டு விமானிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு விமானி பலியானார். போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மிகுந்த வருத்தம் அளிப்பதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மிகவும் வருத்தம் அடைந்தேன்
இது தொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியிருப்பதாவது:- "மொரோனாவின் கோலாரஸ் என்ற பகுதியில் விமானப்படையின் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளானது என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். மீட்பு பணியில் ஒத்துழைப்பு அளிக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட வேண்டும். விமானிகள் பத்திரமாக இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications