For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பெருங்கடல் கூட்டு கடற்படை பயிற்சி- இந்தியாவின் அழைப்பை நிராகரித்த மாலத்தீவு

இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படை நடத்தும் கூட்டு பயிற்சியில் பங்கேற்க மாலத்தீவு மறுத்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பெருங்கடலில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்திய கடற்படை பிரமாண்ட கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதில் பங்கேற்க மாலத்தீவு மறுத்துவிட்டதாக கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் தலை தூக்குகிறது. இதற்கு பதிலடி கொடுக்க இந்திய கடற்படை வியூகம் வகுத்துள்ளது.

Maldives declines India’s invite for naval exercise, says Navy chief

இதன் ஒரு பகுதியாக மார்ச் 6-ந் தேதியன்று இலங்கை உட்பட பல நாடுகளுடன் இணைந்து இந்திய பெருங்கடலில் பிரமாண்ட கூட்டு பயிற்சியை 'மிலன்' என்ற பெயரில் இந்திய கடற்படை மேற்கொள்கிறது. மார்ச் 13-ந் தேதி வரை இந்த கூட்டு பயிற்சி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை தளபதி சுனில் லன்பா, கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்க மாலத்தீவு மறுத்துவிட்டது. மாலத்தீவு காரணம் எதனையும் தெரிவிக்கவில்லை என்றார்.

English summary
Navy Chief Admiral Sunil Lanba said that Maldives has declined India’s invitation to participate in the biennial naval exercise Milan, which starts March 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X