For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீல் சேரில் அமர்ந்தபடி பிரசாரம் மேற்கொண்ட மம்தா.. ''அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது'' என்று ஆவேசம்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பிரசாரம் மேற்கொண்டபோது காலில் அடிபட்ட மம்தா பானர்ஜி, இன்று உடைந்த காலுடன் வீல் சேரில் அமர்ந்தபடி பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார்.

அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது. வாழ்க்கையில் நான் பல தாக்குதல்களை எதிர்கொண்டேன், ஆனால் ஒருபோதும் தலை வணங்கவில்லை என்று மம்தா பானர்ஜி ஆவேமாக பேசினார்.

திண்டுக்கல் ஆத்தூர் அணையில் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு திண்டுக்கல் ஆத்தூர் அணையில் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

ஒரு சிறு விபத்தை பெரிய சம்பவம்போல் வெளிக்காட்டி, அனுதாபத்தை வெளிப்படுத்தி மம்தா ஓட்டுகளை வாங்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பரபரக்கும் மேற்கு வங்கம்

பரபரக்கும் மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாஜக முடிவாக உள்ளது. திரிணாமுல் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் வலது கரமாக விளங்கிய மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி சமீபத்தில் பாஜகவில் இனைந்தார். ''மம்தா தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடட்டும்'' என்று அவர் சவால் விடுத்தார்.

மம்தா மீது தாக்குதல்

மம்தா மீது தாக்குதல்

இந்த சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் களம் இறங்குவதாக அறிவித்தார். சுவேந்து அதிகாரியும்-மம்தாவும் நந்திகிராமில் நேரடியாக மோதுகின்றனர். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதி என்றும் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்றும் மருத்துமனையில் இருந்தபடி காலில் கட்டுப் போட்ட நிலையில் உருக்கமுடன் தெரிவித்தார் மம்தா.

பாஜக குற்றச்சாட்டு

பாஜக குற்றச்சாட்டு

ஆனால் இந்த தாக்குதலை மறுத்துள்ள மேற்கு வங்க பாஜக, ''ஒரு சிறு விபத்தை பெரிய சம்பவம்போல் வெளிக்காட்டி, அனுதாபத்தை வெளிப்படுத்தி மம்தா ஓட்டுகளை வாங்க பார்க்கிறார். தேர்தலுக்காக மம்தாவும், பிரசாந்த் கிஷோரும் செய்த திட்டமிட்ட நாடகம்தான் இது''என்று சரமாரியாக குற்றம் சாட்டியது. மம்தாவை யாரும் தாக்கவில்லை. காரின் கதவு இடித்ததால் அவர் காலில் அடிபட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியது.

வீல் சேரில் அமர்ந்தபடி மம்தா பிரசாரம்

வீல் சேரில் அமர்ந்தபடி மம்தா பிரசாரம்

இந்த நிலையில் மம்தா பானர்ஜி தான் ஏற்கனவே கூறியபடி, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து ஹஸ்ரா பகுதி வரையில் உள்ள 5 கி.மீ தூரம் வீல் சேரில் அமர்ந்தபடி பயணித்து பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் கட்சியின் தலைவர்கள் உடன் சென்றனர். வழிநெடுகிலும் மம்தா பானர்ஜிக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

அடிபட்ட புலி ஆபத்தானது

அடிபட்ட புலி ஆபத்தானது

பின்னர் வீல் சேரில் இருந்தபடி பொதுமக்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:-
எனக்கு இந்த காயம் அதிக வலியை கொடுக்கிறது. ஆனால் அதை காட்டிலும் என் மக்கள் படுகின்ற வேதனையும், வலியும் அதிகம் என்பதை உணர்ந்து தற்போது களத்திற்கு வந்துள்ளேன். வாழ்க்கையில் நான் பல தாக்குதல்களை எதிர்கொண்டேன். ஆனால் ஒருபோதும் தலை வணங்கியதில்லை. ஏனெனில் அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது. வாழ்க்கையில் நான் பல தாக்குதல்களை எதிர்கொண்டேன், ஆனால் ஒருபோதும் தலை வணங்கவில்லை. வீல் சேரில் இருந்தபடியே முழு வங்காளத்தையும் சுற்றி வருவேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

English summary
Mamta Banerjee, who was hit in the leg during the campaign, resumed her campaign today in a wheelchair with a broken leg
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X