For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிணமுல் காங். தலைவர் மமதா பானர்ஜி அசுர குலத்தை சேர்ந்தவர்.. பாஜக எம்பி பாய்ச்சல்

Google Oneindia Tamil News

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அசுர குலத்தைச் சேர்ந்த இரணியகஷ்யப் வழிவந்தவர் என்று பாஜக எம்.பியும், சாமியாருமான ஷாக்‌ஷி மகாராஜ் விமர்சித்துள்ளார்.

வாயைத்திறந்தாலே கருத்துகள் என்ற பெயரில் உளறிக் கொட்டுவது உன்னவ் தொகுதியின் எம்.பி.யான ஷாக்‌ஷி மகாராஜின் ஸ்டைல். மக்களவை தேர்தல் நடந்து கொடிருந்தபோது வாக்களார்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால் சபித்து விடுவேன் என்று மிரட்டி வாக்கு கோரினார். இதற்கு பாஜகவோ, தேர்தல் ஆணையமோ உரிய பதிலை கூறவில்லை.

Mamata Banerjee is from Hiranyakashyaps Family: Sakshi Maharaj

ஒரு ஜனநாயக நாட்டில் மதத்தை அடிப்படையாக வைத்து மிரட்டி வாக்கு கோரியதை எந்த ஜனநாயக அமைப்புகளும் தட்டி கேட்கவில்லை. அதோடு நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என கூறியவரும் இவர்தான். பாலியல் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் கொடுங்குற்றவாளியான போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆதரவாக பேசியவரும் இந்த ஷாக்‌ஷி மகாராஜ் தான்.

இப்படிப்பட்ட பின்னணியை கொண்ட ஷாக்‌ஷி மகாராஜ் இப்போது மம்தா பேனர்ஜியை தாக்க தொடங்கியுள்ளார். மம்தா பேனர்ஜி அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகஷ்யப் வழிவந்தவர் என்று கூறியுள்ளார். மம்தா சமீபத்தில் மேற்கு வங்கத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை வழிமறித்த சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர்.

இதனால் தன்னை வழி மறித்தவர்களை மம்தா பேனர்ஜி காரில் இருந்து இறங்கி எச்சரித்தார். அதோடு அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். இந்நிலையில் மம்தாவை அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகஷ்யப் வழிவந்தவர் என்று கூறிய ஷாக்சி மகராஜ் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டவர்களை எச்சரித்ததாலேயே தான் அவரை இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

இவங்களும் இழுக்கறாங்க.. அவங்களும் இழுக்கறாங்க.. யார் பிளான் வெல்லப் போகுதோ!இவங்களும் இழுக்கறாங்க.. அவங்களும் இழுக்கறாங்க.. யார் பிளான் வெல்லப் போகுதோ!

இரணியகஷ்யப் என்ற அசுர குல அரசர் தனது மகன் பிரகலாதன் ஸ்ரீஹரி மீது நாட்டம் கொண்டிருந்ததால் சொந்த மகன் என்று கூட பாராமல் வதைத்தவர் என்பது புராணக் கதை. இந்த இரண்ய கஷ்யப்பின் வழி வந்தவர்தான் மம்தா என்று உன்னவ் தொகுதியின் பாஜக எம்.பி.யும், சாமியாருமான ஷாக்‌ஷி மகாராஜ் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி ஜெய்ஸ்ரீராம் என்ற முழகத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகவும் நாங்கள் இல்லை. ஆனால், பாஜக அரசு அரசியலையும் மதத்தையும் கலந்து இத்தகைய ஸ்லோகங்கள் மூலம் மேற்குவங்கத்தில் அமைதியின்மையை விளைவிக்க முயற்சிக்கிறது. வெறுப்புணர்வை விதைக்க பாஜக செய்யும் முயற்சி இது" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Trinamool Congress leader Mamata Banerjee is from Hiranyakashyap's Family said BJP MP Sakshi Maharaj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X