For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது பாகுபலி 2 படம் இன்னும் பார்க்கலையா.. ஊழியரை டிஸ்மிஸ் செய்த "லூசு பாஸ்"!

பாகுபலி 2 திரைப்படம் பார்க்காத ஊழியரை ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பாகுபலி 2 திரைப்படம் பார்க்காத ஊழியரை ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் சத்யராஜ், பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் 2-ஆம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

Man thrown out of job for not watching Bahubali 2 yet

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. இந்நிலையில் ரிலீஸ் ஆன ஒரே நாளில் ரூ.126 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

இந்நிலையில் ஒரு நிறுவனத்தில் ஒரு ஊழியர் இந்தப் படம் பார்க்கவில்லை என்ற காரணத்திற்காக வேலையை விட்டு நீக்கியுள்ளனர். வழக்கமாக பணியாளர்களை வேலை செய்யவில்லை, மோசடி, தாமத வருகை, ஒழுக்கக் கேடு, சரி வர பணிக்கு வராதது உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே பணி நீக்கம் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் பாகுபலி படம் பார்க்காததால் இளைஞர் ஒருவரை பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தை எடுத்த விதம் தொடர்பாக நிறுவனத்தில் குரூப் டிஸ்கஷன் நடத்தியுள்ளனர். அப்போது ஊழியர் மகேஷ் பாபு என்பவர் தப்புத் தப்பாக காட்சிகளைக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட நிறுவன உரிமையாளர் மகேஷ் பாபு படமே பார்க்கவில்லை என்பதை அறிந்தார். இதனால் அவருக்குக் கோபம் வந்து விட்டது. படம் ரிலீஸ் ஆகி 6 நாள்களாகியும், படம்பார்க்க விடுப்பு அளித்தும் இதுவரை படம் பார்க்காததால் மகேஷ் பாபுவுக்கு நிறுவன உரிமையாளர் மெமோ கொடுத்தார். அதில் மகேஷ் அளித்த பதில் திருப்திகரமானதாக இல்லை என்பதால் மகேஷை பணியிலிருந்து நீக்கினார்.

இவர் பாஸா இல்லை லூஸான்னே தெரியலையே!

English summary
A 29 year old man Mahesh Babu was today sacked by his company after he was found having not watched Bahubali 2 even 6 days after his release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X