For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாதாள நகரம் கண்டுபிடிப்பு... தீவிரவாதிகளின் கைவரிசையா? என விசாரணை

காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாதாள நகரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதை போலீஸார் கண்டறிந்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே பாதாளத்தில் சிறிய நகரம் ஒன்று கட்டப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இந்துக்கள் இந்த விஸ்வநாதரை தன் வாழ்வின் ஒரு முறையேனும் தரிசித்துவிட்டு வர வேண்டும் என்பது லட்சியம்.

இதனால் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். எனவே இப்பகுதி மிகவும் பிசியான பகுதியாகவே காணப்படும்.

போலீஸ் ரோந்து

போலீஸ் ரோந்து

இந்நிலையில் வாரணாசியை சேர்ந்த காவல் துறை எஸ்எஸ்பி ஆர்கே பாரத்வாஜ் கடந்த திங்கள்கிழமை இரவு ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது டால்மாண்டி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மங்கலான வெளிச்சம்

மங்கலான வெளிச்சம்

ஹபீஸ் மசூதி பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது பழைய வீட்டின் கீழ்தளத்தின் ஒரு பகுதியில் இருந்து மங்கலான வெளிச்சம் வந்தது. இதையடுத்து அங்கு சென்று பார்வையிட்டார்.

40 பிரிவுகள்

40 பிரிவுகள்

அங்கு கார் பார்க்கிங் பணிகள் செய்யப்பட்டு கிடந்தன. இதை பார்த்த பாரத்வாஜுக்கும் போலீஸாருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த கட்டுமானம் டால்மாண்டியில் தொடங்கி பெனியா பார்க் சாலையில் முடிவடைகிறது. 40 பிரிவுகளாக ஒன்றன் பின் ஒன்றாக அறை போன்று கட்டப்பட்டு வருகிறது.

மார்க்கெட் போன்ற பகுதி

மார்க்கெட் போன்ற பகுதி

பயங்கரவாதிகள் டார்கெட்டாக இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே இதுபோன்று பாதாள நகரம் கட்டப்படுவது வளர்ச்சி துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸாருக்கு தெரியாமல் இருந்தது எப்படி என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கெட் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த பாதாள நகரத்தில் பெரிய பெரிய கன்டெய்னர்கள் உள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

நடவடிக்கை எடுக்கப்படும்

மசூதியை சுற்றியுள்ள இடமும் தோண்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாரத்வாஜ் கூறுகையில், பாதாளத்தில் ஒரு மார்க்கெட் போன்று ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருவது உண்மையில் ஆபத்தான விஷயம் என்றாலும் கூட டால்மாண்டியா பகுதியில் ஒட்டுமொத்த மார்க்கெட்டும் அமைப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

English summary
Its very Shocking to hear that a ‘mini city’ has been discovered under the ground near famous Kashi Vishwanath temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X