எல்லையில் போர் பதற்றம்: சீன அதிபர் மற்றும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் பிரதமர் லிகெகியாங்கிற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்லாம் விவகாரத்தில், இந்தியா மற்றும் சீனா எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றன.

Modi greeted Xi and Li Keqiang on their birthdays through his page on Weibo

எல்லையில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சீனா, இந்தியாவை அவ்வப்போது ராணுவ வீரர்களை திரும்ப பெறக்கோரி எச்சரித்து வருகிறது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் அந்நாட்டு பிரதமர் லி கெகியாங்கிற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்நாட்டின் சமூக வலைதளமான சீன வெய்போ இணையதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பிரிக்ஸ் மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் சீனாவின் சிசுசுவான் மாகாணதில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Mansoor Ali Slams Bigg Boss and PM Modi-Oneindia Tamil

மோடியின் இந்த கருத்துக்களுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் சீன சோஷியல் மீடியாவில் ரியாக்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Modi greeted Xi and Li Keqiang on their birthdays through his page on Weibo, the Chinese equivalent of Twitter. The PM has taken to Weibo six times since the stand-off between the two countries began.
Please Wait while comments are loading...