For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வி.கே.சிங், பொன்னார் மற்றும் புதுமுகங்களுடன் கூடிய மோடி அரசின் 22 இணை அமைச்சர்கள் பின்னணி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட 22 பேர் மோடி அரசில் இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

மோடி அரசில் ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி உட்பட 23 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதேபோல் அதேபோல் வி.கே.சிங் உட்பட 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட 12 இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

வி.கே.சிங்

வி.கே.சிங்

நாட்டின் 24வது ராணுவ தளபதியாக இருந்தவர் வி.கே.சிங். ஹரியானாவைச் சேர்ந்த இவர் அண்மையில் பாஜகவில் இணைந்து காசியாபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

ராவ் இந்தர்ஜித்சிங்

ராவ் இந்தர்ஜித்சிங்

ஹரியானாவைச் சேர்ந்த ராவ் இந்தர்ஜித்சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர். 1991-96ஆம் ஆண்டு கேபினட் அமைச்சராக இருந்தார். 2004-2006ஆம் ஆண்டு இணை வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தவர்.

சந்தோஷ் கங்வார்

சந்தோஷ் கங்வார்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் கங்வார் மத்திய இணை அமைச்சராக பணியாற்றியவர். 1989ஆம் ஆண்டு முதல் பெரேலி லோக்சபா எம்.பி.யாக பதவி வகித்து வருபவர்.

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான்

பாஜகவின் மூத்த தலைவரான தேவேந்திர பிரதான் மகன் தர்மேந்திர பிரதான். பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக இருக்கிறார்.

சர்பானந்தா சோனோவால்

சர்பானந்தா சோனோவால்

அஸ்ஸாம் மாநில பாஜக தலைவர் சர்பானாந்தா சோனோவால். 1992ஆம் ஆண்டு முதல் 1999 வரை அனைத்து அஸ்ஸாம் மாணவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். லோக்சபா தேர்தலில் அஸ்ஸாமின் லக்மிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். முன்பு அசாம் கன பரிஷத்தில் இருந்தார். பின்னர் பாஜகவில் இணைந்தார்.

பிரகாஷ் ஜவ்தேகர்

பிரகாஷ் ஜவ்தேகர்

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரகாஷ் ஜவ்தேகர், பாஜகவின் செய்தித் தொடர்பாளர். ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். மகாராஷ்டிரா அரசில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர்.

பியூஸ் கோயல்

பியூஸ் கோயல்

பாரதிய ஜனதாவின் தேசிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார் பியூஸ் கோயல். பாஜகவின் தகவல் தொடர்பு பிரசார குழுத் தலைவராகவும் இருக்கிறார். நதிகள் இணைப்புக்கான கமிட்டியிலும் இடம்பெற்றிருந்தவர்.

ஜிதேந்திரசிங்

ஜிதேந்திரசிங்

டாக்டரான ஜிதேந்திர சிங், நாளேடுகளில் கட்டுரை எழுதி வருபவர். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர். ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

திருச்சியை சேர்ந்த தமிழரான நிர்மலா சீதாராமன் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர். பிபிசி நிறுவனத்திலும் சில காலம் பணியாற்றியவர். 2003-2005ஆம் ஆண்டு தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினராக பதவி வகித்தவர்.

சித்தேஸ்வர

சித்தேஸ்வர

கர்நாடகத்தின் தாவங்கரே லோக்சபா தொக்டுஹி எம்.பியாவார். அத்தொகுதியில் 3 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தின் லிங்காயத்து சமூகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

மனோஜ் சின்ஹா

மனோஜ் சின்ஹா

மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் 1983ஆம் ஆண்டு மாணவர் சங்க தலைவராக இருந்தவர். காசிபூர் எம்.பி.யாவார்.

உபேந்திரா குஸ்வாஹா

உபேந்திரா குஸ்வாஹா

பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் சமதாவின் தலைவர் உபேந்திரா. பீகாரில் 4 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட இவரது கட்சி 3 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

பொன். ராதாகிருஷ்ணன்

பொன். ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக தலைவரான பொன் ராதா கிருஷ்ணன் வாஜ்பாய் அரசில் இணை அமைச்சராக பதவி வகித்தவர். கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற ஒரே ஒரு வேட்பாளர் பொன்னார் மட்டுமே.

கிர்ரென் ரிஜுஜூ

கிர்ரென் ரிஜுஜூ

அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த கிர்ரென் ரிஜுஜூ, பாஜகவின் தேசிய செயலர்களில் ஒருவர்.

கிருஷ்ணபால் குஜ்ஜார்

கிருஷ்ணபால் குஜ்ஜார்

ஹரியானாவின் குஜ்ஜார் சமூகத்தின் தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணபால் குஜ்ஜார். இவர் பரிதாபாத் தொகுதி எம்.பி.யாவார்.

சஞ்சீவ் பலியான்

சஞ்சீவ் பலியான்

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் கலவரத்தின் போது ஊடகங்களில் பேசப்பட்டவர் சஞ்சீவ் பலியான். அதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் முசாபர்நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானவர்.

மன்ஷுக்பாய் தாஞ்சிபாய் வாசா

மன்ஷுக்பாய் தாஞ்சிபாய் வாசா

குஜராத்தின் பரோஜ் தொகுதி எம்.பி.யாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ராவ்சாகேப் தத்ராவ் படீல் தன்வே

ராவ்சாகேப் தத்ராவ் படீல் தன்வே

மகாராஷ்டிராவின் ஜல்னா லோக்சபா தொகுதி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருமுறை எம்.எல்.ஏவாக இருந்தவர்.

விஷ்ணு தேவ் சாய்

விஷ்ணு தேவ் சாய்

சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவரன விஷ்ணு தேவ் சாய், ராய்கார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்,

சுதர்சன் பகத்

சுதர்சன் பகத்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடி இனத் தலைவர்களில் ஒருவர் சுதர்சன் பகத். அம்மாநிலத்தின் லோகர்தாகா தொகுதி எம்.பி.யாவார்.

English summary
Members of the Parliament, who will be part of his Council of Ministers, to the Rashtrapati Bhavan on Monday morning, sources said. The 45-member council of ministers is reportedly set to be sworn in at 6 pm today, along with him. The list includes 24 Cabinet ranks, 10 Ministers of State with Independent Charge, and 11 Ministers of State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X