For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாதம் ரூ.80 லட்சம் சம்பாதிக்கும் "காளை" மாடு.. எப்படி தெரியுமா?

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜெய்பூர்: ராஜஸ்தானில் காளை மாடு ஒன்று அதன் உரிமையாளருக்கு மாதம் 80 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டி தருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஆண்டு தோறும் உழவர் சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் விதவிதமான மாடுகள் கலந்துகொள்ளும். இங்கு மாடுகள் விற்பனையும் செய்யப்படும். அதுபோல் இந்த ஆண்டு நடந்த உழவர் சந்தையில் அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்தது ஒரு காளை மாடு. அதன் பெயர் யுவராஜ்.

 monthly 80 lakh rupees earning bulls

எட்டு வயதாகும் அந்த காளையானது 1.5 டன் எடை மற்றும் 5.9 அங்குலம் உயரம் கொண்டதாகவும் உள்ளது. மற்ற மாடுகளை பராமரிப்பது போல் இதை பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல அதன் உரிமையாளர் கூறினார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், யுவராஜ் காளைக்கு தினமும் 20 லிட்டர் பாலும், 15 கிலோ பழங்களும் சாப்பிட கொடுப்பதாக கூறுகிறார். இதை பராமரிப்பதற்காக நான்கு வேலை ஆட்கள் இருப்பதாகவும் கூறினார்.

இதுவரை தேசிய அளவில் நடைபெற்ற 17 போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று தனக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளது இந்த காளை என அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த யுவராஜ் காளையின் விந்துக்களை விற்பனை செய்வதன் மூலம் மாதம் தோறும் 80 லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தது.

அந்த உழவர் சந்தைக்கு வந்த ஒரு பணக்காரர் அந்த காளையை 9.25 கோடி ரூபாய்க்கு விலைக்கு கேட்டதற்கு அதை விற்க முடியாது என்றும் என் வாழ்க்கையே இந்த காளையில் தான் அடங்கியுள்ளது என்றும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

English summary
According to its owner said, monthly 80 lakh rupees earning from bulls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X