For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனவுகளை சிதைத்து விட்டார் மோடி… கலங்கிய ராம்ஜெத்மலானி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மீது தான் கொண்டிருந்த கனவுகளை அவரே சிதைத்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் 78 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது.

போராட்டத்தில் பேசிய முன்னாள் ராணுவ ஜெனரல் சத்பீர் சிங், நாங்கள் இப்போதும் எங்களது நாட்டிற்காக உயிரை கொடுக்க தயாராக உள்ளோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு அநீதியை வழங்கக்கூடாது. என்று கூறினார்.

பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பேசினார். செய்தியாளர்களிடம் பேசும் போது மோடி பற்றியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி பற்றியும் விமர்சித்தர்.

சிதைந்த நம்பிக்கை

சிதைந்த நம்பிக்கை

அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்த நாட்டு மக்களை கீழே தள்ளிவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கையை சிதைத்துவிட்டார்.

நாட்டின் எதிரி

நாட்டின் எதிரி

நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார். இவர்களை போல நானும் ஒரு அரசியல்வாதி என்று கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஆனால் நான் அவர்களை போல மக்களையும் நண்பர்களையும் மறந்து பதவியில் திளைக்கும் அரசியல்வாதி இல்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தேசமக்களை பாதுகாத்த வீரர்களுக்காக நான் இங்கு வந்தேன்" என்று கூறினார்.

ஓய்வூதியம் அறிவிப்பு

ஓய்வூதியம் அறிவிப்பு

ராணுவத்தில் 1996ம ஆண்டுக்கு முன்பு ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு வகையான ஓய்வூதியமும், 1996-2005 வரை மற்றும் 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறுவிதமாகவும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு கூடுதலாக ஓய்வூதியம் கிடைக்கிறது.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்

இந்த முரண்பாட்டைக் களையும் வகையில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.

தொடரும் போராட்டம்

தொடரும் போராட்டம்

இதற்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2014-15ம் நிதியாண்டில் அமலுக்கு வரவேண்டிய இந்த சட்டம் இன்னும் நடைமுறைபடுத்தவில்லை. இதனை வலியுறுத்தியே முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராம்ஜெத்மலானி விமர்சனம்

ராம்ஜெத்மலானி விமர்சனம்

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தியவர் ராம்ஜெத்மலானி, இப்போது அவரே மோடியின் அரசுக்கு எதிராக விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Extending his support to the ex-servicemen protesting at New Delhi's Jantar Mantar, senior lawyer Ram Jethmalani expressed his concern over the delay in the implementation of the 'One Rank One Pension', saying PM Narendra Modi had “failed his dream”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X