நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா.. நட்டாவை சந்தித்து விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது குறித்து அவசர ஆலோசனையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவுடன், விஜயபாஸ்கர் நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்படுகிறது. மத்திய அரசு விடாப்பிடியாகத் தமிழகத்திற்கு விலக்கு அளிக்காமல் மருத்துவ மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது.

NEET exam, Vijayabaskar meets Nadda

இந்நிலையில், டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் பேசி அவசரச் சட்டம் மூலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றார்.

அங்கு மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் அவசரச் சட்ட வரைவுடன் டெல்லி சென்று நீட் தேர்வுக்கு ஓராண்டுக்காவது விலக்கு பெற முயற்சி மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN health minister Vijayabaskar met Union minister Nadda to discuss about NEET exam.
Please Wait while comments are loading...