For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். அனுப்பிய டிரோன்.. படைகளை குவித்த நேபாளம்.. தயார் நிலையில் சீனா.. எல்லையில் பெரும் பதற்றம்!

Google Oneindia Tamil News

லடாக்: இந்தியாவை சுற்றி லடாக், உத்தரகாண்ட் மற்றும் காஷ்மீர் எல்லையில் மிகப்பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. மூன்று நாடுகள் இந்தியாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.

இந்தியாவில் இருக்கும் எல்லை பகுதிகளான காஷ்மீர், லடாக், சிக்கிம், உத்தரகாண்ட், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் பகுதிகளில் அண்டை நாடுகள் அத்துமீற தொடங்கி உள்ளது. அண்டை நாடுகள் என்றால் சீனா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆகும்.

இந்த மூன்று நாடுகளும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக மூன்று நாடுகளும் திட்டம் போட்டு எல்லையில் அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறது.

நேபாளத்தின் புது திட்டம்.. சீன தலைவர்களுடன் சீக்ரெட் மீட்டிங்.. லடாக்கில் பதற்றம்.. என்ன செய்கிறது? நேபாளத்தின் புது திட்டம்.. சீன தலைவர்களுடன் சீக்ரெட் மீட்டிங்.. லடாக்கில் பதற்றம்.. என்ன செய்கிறது?

சீனா முதலில்

சீனா முதலில்

முதலில் சீனாதான் எல்லையில் அத்துமீறல்களை நிகழ்த்த தொடங்கியது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் கடந்த மே 5ம் தேதி சீனாதான் படைகளை அதிகமாக குவித்தது. அதோடு சீனாவின் ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் எல்லைக்குள் புகுந்தது. அப்போதுதான் லடாக்கில்பிரச்சனை ஏற்பட தொடங்கியது. தற்போது கல்வான் பகுதியில் 20 இந்திய வீரர்களின் உயிர்களை வாங்கும் அளவிற்கு இந்த சூழ்நிலை மோசமாகி உள்ளது.

அமைதி இல்லை

அமைதி இல்லை

இது தொடர்பாக எல்லையில் நடந்த எந்த விதமான அமைதி பேச்சுவார்த்தையும் எடுபடவில்லை. சீனா எல்லையில் தயாராக இருக்கிறது. இந்தியாவின் கல்வான் பகுதியை தொடர்ந்து சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த இடம் வரலாற்று ரீதியாக எங்களுக்கு சொந்தம் என்று சீனா தொடர்ந்து எல்லையில் உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக லடாக்கில் இப்போதைக்கு பதற்றம் குறைய வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

பாகிஸ்தான் எப்படி

பாகிஸ்தான் எப்படி

இன்னொரு பக்கம் பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அங்கு பாகிஸ்தான் ராணுவம் தினமும் தாக்குதல் நடத்துகிறது. அதேபோல் தினமும் இந்தியாவும் அதிரடியாக பதிலடி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. அதேபோல் பாகிஸ்தானின் ராணுவம் காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத அமைப்புகள் மூலமும் இந்தியாவில் தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டி வருகிறது.

பாகிஸ்தான் என்கவுண்டர்

பாகிஸ்தான் என்கவுண்டர்

இதனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பலர் தினமும் இந்திய ராணுவம் மூலம் என்கவுண்டர் மூலம் கொல்லப்படுகிறார்கள். நேற்று மட்டும் மொத்தம் 8 தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ய டிரோன் விமானங்களை அனுப்பியது.

என்ன டிரோன்

என்ன டிரோன்

ஆம் காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகள், குண்டுகளை பார்சல் போல அந்த நாட்டு ராணுவம் அனுப்பி உள்ளது. இதை இந்திய ராணுவம் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இது மிக முக்கியமான சதித்திட்டம் என்று பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் எதையோ மனதில் வைத்து இப்படி செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். சீனாவின் அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

நேபாளம் எப்படி

நேபாளம் எப்படி

இன்னொரு பக்கம் நேபாளம் தனது எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இந்தியாவின் லிபுலேக் உள்ளிட்ட இடங்களை தங்கள் பகுதிக்கு கீழ் கொண்டு வந்து அந்த நாடு மேப் வெளியிட்டது. அதை தொடர்ந்து தற்போது படைகளையும் குவித்து வருகிறது. உத்தரகாண்ட் அருகே நேபாளம் தனது படைகளை குவித்து வருகிறது. எல்லையில் இதனால் எப்போது வேண்டுமானாலும் நேபாளம் அத்துமீறலாம் என்கிறார்கள்.

முக்கோண வியூகம்

முக்கோண வியூகம்

சீனாவுடன் தீவிரமாக நேபாளம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி பாகிஸ்தான் - சீனா - நேபாளம் என்று எல்லையில் மூன்று நாடுகளை முக்கோண வியூகம் அமைத்து உள்ளது. சீனாவின் பேச்சை கேட்டு நட்பு நாடுகள் கூட இந்தியாவிற்கு எதிராக திரும்ப தொடங்கி உள்ளது. இதை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Nepal deploys force, Pakistan sends drones, China ready to take on India amid border tension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X