For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைனில் "பிலிம்" காட்டும் நெட்பிளிக்ஸ்... இந்தியாவில் களமிறங்குகிறது!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆன்லைனில் திரைப்படங்களை வழங்கும் பிரபல அமெரிக்க நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்தியாவிலும் தனது வர்த்தகத்தைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்குத் துறையில் முக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ். ஆன்லைனில் திரைப்படங்களை வழங்குவதுதான் இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம். உலகம் முழுக்க ஆறு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் இயங்கும் பிரமாண்ட நிறுவனம் இது.

உலகின் பல மொழிகளில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இது ஆன்லைனில் வழங்கி வருகிறது. இதன் லைப்ரரியில் மட்டும் லட்சக்கணக்கான படங்களின் டிவிடிகள் உள்ளன.

Netflix set to launch in India

இந்நிலையில், இந்த நெட்பிளிக்ஸ் நிறுவனமானது இந்தியாவிலும் தன் வர்த்தகத்தைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தவாரம் நடைபெறவுள்ள சி இ எஸ் 2016 டிரேட் ஷோவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் தனது வர்த்தகத்தைத் தொடங்க நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திரைப்படங்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள நெட்பிளிக்ஸ், அதன் நிகழ்ச்சிகளையும் ஆன்லைனில் ஒளிபரப்பி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு 4ஜி நிறுவனத்துடன் நெட் பிளிக்ஸ் இதற்காக கை கோர்த்துள்ளதாம். இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு ஏர்டெல் மட்டுமே 4ஜி சேவையசை வழங்கி வருகிறது. விரைவில் ரிலையன்ஸும் இதில் இணையவுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு இன்டர்நெட் வீடியோ நுகர்வு 38 சதவீதம் என்ற அளவிலிருந்து கடந்த 2014ல் 46 சதவீதமாக உயர்ந்தது. 2019ம் ஆண்டு வாக்கில் இது 74 சதவீதமாக கிடுகிடு வளர்ச்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வடக்கு, தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐரோப்பாவின் சில நாடுகளில் நெட்பிளிக்ஸ் சேவையை அளித்து வருகிறது.

தற்போது அமெரிக்காவில் மாதச் சந்தாவாக நெட்பிளிக்ஸ் ரூ. 600 வசூலிக்கிறது. இந்தியாவில் இது எப்படிப்பட்ட கட்டணத்தை வசூலிக்கும் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

English summary
Popular online streaming service Netflix is likely to launch in India next week during the trade show CES 2016. The website was planning to enter the Asian nations soon with Singapore and Hong Kong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X