புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் குஜராத்தின் அச்சல்குமார் ஜோதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக அக்சல்குமார் ஜோதி பதவியேற்றார்.

இந்திய தலைமை தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்த நஜீம் ஜைதிக்கு இன்றுடன் 65 வயது ஆவதால் அவர் ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது.

New CEC Achal Kumar Joti joined office Election Commission

குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலாளரான அச்சல் குமார் ஜோதி, கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 7ம்தேதி தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்றுக்கொண்ட இவர் இன்னும் ஓராண்டு காலம் பதவி வகிப்பார். தற்போது உருவாகும் காலியிடத்திற்கு புதிதாக ஒரு தேர்தல் ஆணையரும் நியமிக்கப்படுவார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
New CEC Achal Kumar Joti joined office Election Commission and take charge on Julay 6 .
Please Wait while comments are loading...