ஒடிஷா ரயில் விபத்து: இது அரசியலுக்கான நேரமா? ராஜினாமா செய்ய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு!
புவனேஷ்வர்: ஒடிஷா ரயில்கள் விபத்துக்கு பொறுப்பேற்று தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் விபத்து நிகழ்ந்தது. உலகையே உலுக்கி இருக்கும் இந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ நெருங்கி உள்ளது. மேலும் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஒடிஷா ரயில் விபத்து பகுதியில் கடந்த 3 நாட்களாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முகாமிட்டுள்ளார். அங்கு நடந்த மீட்பு பணிகளை முழுமையாக நேரில் ஆய்வு செய்தார். அத்துடன் மறுசீரமைப்பு பணிகளையும் இரவும் பகலுமாக அஸ்வினி வைஷ்ணவ் அங்கேயே முகாமிட்டு பார்வையிட்டு வருகிறார்.
இதனிடையே ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று கடந்த காலங்களைப் போல அமைச்சர் பதவியை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், ரயில்வே அமைச்சர் ஒவ்வொரு முறையும் நமது ரயில்வே நிர்வாகம் பாதுகாப்புடன் உள்ளது; விபத்துகள் நடக்காது என்றார். ஆனால் இப்போது விபத்து நிகழ்ந்துவிட்டது. ஏற்கனவே ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகி இருக்கிறார். இதனை நாம் மோடி அமைச்சரவையிடம் எதிர்பார்க்க முடியாது. கொஞ்சமாவது அவமானமாக உணர்ந்தால் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், ஒடிஷா ரயில் விபத்துக்கு மனித தவறுகளே இல்லை என கூறிவிட முடியாது. ஆகையால் ரயில்வே அமைச்சர் இந்த நேரம் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார். ஏற்கனவே மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது விபத்து ஒன்றுக்காக பதவியை ராஜினாமா செய்தவர் மமதா பானர்ஜி.
ஆனால் இந்த கோரிக்கைகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், அனைத்திலும் வெளிப்படைத்தன்மை என்பது தேவை. நாங்கள் அதனையே கடைபிடிக்கிறோம். இந்த நேரத்தில் அரசியல் செய்வது சரியானது அல்ல. மீட்பு, மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தருணம் இது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications