For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளியில் முதலில் தேசிய கொடி ஏற்றம்.. அடுத்து அபின் சப்ளை! பதற வைத்த ஃபோட்டோக்கள்! மிரண்ட அதிகாரிகள்

Google Oneindia Tamil News

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதை ஒட்டுமொத்த தேசமாக நேற்றைய தினம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது.

Recommended Video

    பள்ளிக்கூடத்தில் அபின் சப்ளே! பதற வைத்த ஃபோட்டோக்கள்! மிரண்ட அதிகாரிகள்

    இந்த 76ஆவது சுதந்திர தினத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் நினைவு கூரப்பட்டது. நாட்டில் பல்வேறு இடங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

    கர்ப்பிணி கூட்டு பலாத்காரம்... 7 பேர் கொலை! விடுவித்த குஜராத் பாஜக அரசு - கொந்தளிக்கும் எஸ்டிபிஐ கர்ப்பிணி கூட்டு பலாத்காரம்... 7 பேர் கொலை! விடுவித்த குஜராத் பாஜக அரசு - கொந்தளிக்கும் எஸ்டிபிஐ

     தலைநகர் டெல்லி

    தலைநகர் டெல்லி

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், "நாட்டை அரிக்கும் கரையானாக ஊழல் தான் உள்ளது. இந்த ஊழலை ஒழிக்கவில்லை என்றால் நம்மால் முழு வேகத்தோடு முன்னேற முடியாது. ஊழல் நமக்கு ஒரு பெரிய சவால் என்றால் நெபோடிசம் நமக்கு மற்றொரு பெரிய சவால். சிபாரிசுகள் தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தீங்கு" என்று சாடியிருந்தார்.

    பள்ளி

    பள்ளி

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்த நிலையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. அதற்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர். ஆனால், அதன் பின்னர் அங்கு நடந்த சம்பவம் தான் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான படங்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

    போதைப்பொருள்

    போதைப்பொருள்

    அதாவது சுதந்திர தின விழாவுக்குப் பின், அரசுப் பள்ளிக்கு உள்ளேயே அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி ஓம்பிரகாஷ் விஷ்னோய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், கூறுகையில், "சுதந்திர தின விழாவிற்குப் பிறகு சுமார் 12 பேர் பள்ளியில் கூடி உள்ளனர்.

    விசாரணை

    விசாரணை

    பள்ளி வளாகத்திலேயே வைத்து அவர்கள் அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களை சப்ளை செய்துள்ளனர். மேலும், அங்கேயே அவர்கள் போதைப்பொருளையும் எடுத்துக் கொண்டுள்ளனர். இது குறித்து மொத்தம் 4 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இருப்பினும், அப்போது யாரும் இல்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வோம். குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார்.

    English summary
    Opium served in govt school after Independence Day event: (ராஜஸ்தான் பள்ளியில் அபின் சப்ளை) Nation's 76th Independence Day celebration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X