For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த பக்கம் அமெரிக்கா பல்டி அடிக்கிறது.. இந்த பக்கம் பாக். ஷாக் கொடுக்கிறது.. இந்தியாவிற்கு சிக்கல்?

நேற்று இரவு வெறும் 2 மணி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பங்கள் சில காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவுக்கு எதிராக 5 முக்கிய முடிவை எடுத்த பாகிஸ்தான்- வீடியோ

    ஸ்ரீநகர்: நேற்று இரவு வெறும் 2 மணி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பங்கள் சில காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    காஷ்மீர் பிரச்சனை முடிந்துவிட்டது என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அரசியல் வல்லுனர்களின் கருத்துப்படி இப்போதுதான் காஷ்மீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இனிதான் காஷ்மீர் பிரச்சனை உலகம் முழுக்க கவனிக்கப்படும். அதிலும் நேற்று இரவு நடந்த சில அதிரடி திருப்பங்கள் பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கி உள்ளது.

    அந்த ஒரு விஷயம்தான் மாற்றியது.. இந்தியாவிற்கு எதிராக இம்ரான் கான் எடுத்த முடிவிற்கு இதுதான் காரணம்!அந்த ஒரு விஷயம்தான் மாற்றியது.. இந்தியாவிற்கு எதிராக இம்ரான் கான் எடுத்த முடிவிற்கு இதுதான் காரணம்!

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இதையடுத்து இந்தியாவுடன் அனைத்து விதமான உறவுகளையும் நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் இனி எந்த விதமான உறவும் கிடையாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

    அமெரிக்கா டிவிட்

    அமெரிக்கா டிவிட்

    பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், அமெரிக்காவும் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீர் விஷயத்தில் கருத்து கூறியது. அதில், அமெரிக்காவிடம் காஷ்மீர் விஷயம் குறித்து இந்தியா எதுவுமே தெரிவிக்கவில்லை. இந்தியா எங்களிடம் காஷ்மீர் குறித்து எதுவுமே பேசவில்லை, என்று அமெரிக்கா ஷாக் விளக்கம் கொடுத்தது.

    ஐநா பாதுகாப்பு

    ஐநா பாதுகாப்பு

    இதெல்லாம் போக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முறையிட திட்டமிட்டுள்ளது. இந்த வாரமே இது குறித்து புகார் அளிக்கப்பட உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள சீனா, பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    ஒரே இரவு

    ஒரே இரவு

    இத்தனை மாற்றங்களும் ஒரே இரவில் நடந்து இருக்கிறது. அதிலும் நேற்று இரவு 9 மணியில் இருந்து 10 மணிக்குள் அனைத்து விஷயங்களும் நடந்து முடிந்துள்ளது. இதற்கு பின் வெளிநாட்டு அழுத்தங்கள், பாகிஸ்தானுக்குக்கு சீனா போன்ற உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும். அதுதான் புத்திசாலிதனமான விஷயம். இம்ரான் கானும் போரை விரும்ப மாட்டார். அதனால்தான் தற்போது அவர் உலக நாடுகளிடம் பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார். இது இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Overnight twist in Kashmir issue may give a nightmare to India and Modi and Co.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X