For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவகவுடா கட்சி ஆதரவுடன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் ப.சிதம்பரம்!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.

லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தாம் போட்டியிடாமல் மகன் கார்த்தியை போட்டியிட வைத்தார் சிதம்பரம். ஆனால் கார்த்தி வெற்றி பெறவில்லை.

அத்துடன் நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பல முன்னாள் மத்திய அமைச்சர்கள் படுதோல்வியைத் தழுவினர். லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காங்கிரஸால் பெற முடியவில்லை.

ராஜ்யசபாவில் காங். பெரும்பான்மை

ராஜ்யசபாவில் காங். பெரும்பான்மை

தற்போது ராஜ்யசபாவில்தான் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் 68 எம்.பிக்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஆளும் பாஜக ராஜ்யசபாவில் சிறுபான்மையாகவும் இருக்கிறது.

சிதம்பரத்தால் எதிர்கொள்ள முடியும்

சிதம்பரத்தால் எதிர்கொள்ள முடியும்

லோக்சபாவில் மூத்த தலைவர் கமல்நாத் போன்றோர் பாஜகவை எதிர்கொள்ள முடியும். அதே நேரத்தில் ராஜ்யசபாவில் பாஜகவை எதிர்கொள்ள ஒரு வலுவான வாதிடக் கூடிய காங்கிரஸ் தலைவர் இல்லை. இதனால் ப.சிதம்பரத்தை ராஜ்யசபா எம்.பி.யாக்க காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

6 ராஜ்யசபா எம்.பி. தேர்தல்

6 ராஜ்யசபா எம்.பி. தேர்தல்

இந்நிலையில் கர்நாடகாவில் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள், அருணாசலம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தலா ஒரு ராஜ்யசபா எம்.பி. இடம் காலியாகிறது. இவற்றுக்கான தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடைபெறுகிறது.

ஜூன் 2-ல் வேட்புமனு

ஜூன் 2-ல் வேட்புமனு

இதற்கான ஜூன் 2-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்படும். அன்று முதல் வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9-ந் தேதி கடைசி நாளாகும். அதன்பின்னர் மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 12-ம் தேதி கடைசி நாள். 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும்.

கர்நாடகாவில் இருந்து ப.சிதம்பரம்

கர்நாடகாவில் இருந்து ப.சிதம்பரம்

இதில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சிதம்பரத்தை ராஜ்யசபா எம்.பி.யாக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

கர்நாடக சட்டசபை நிலவரம்

கர்நாடக சட்டசபை நிலவரம்

கர்நாடக மாநில சட்டசபையில் மொத்தம் 224 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் பாஜகவின் எதியூரப்பா, ஸ்ரீராமுலு, பிரகாஷ் ஹுக்கேரி ஆகியோர் எம்.பி தேர்தலில் வென்றுள்ளதால் மூவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் தற்போது கர்நாடக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 221.

கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்

கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சிக்கு 46, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

எத்தனை எம்.எல்.ஏக்கள் தேவை?

எத்தனை எம்.எல்.ஏக்கள் தேவை?

கர்நாடக மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி. தேர்வாக மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியால் 2 ராஜ்யசபா எம்.பி.க்களை எளிதாக தேர்வு செய்ய முடியும்.

3வது எம்.பி.யாக சிதம்பரம் போட்டி

3வது எம்.பி.யாக சிதம்பரம் போட்டி

3வது எம்.பி.யை தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன் காங்கிரஸால் எளிதில் பெற்றுவிட முடியும். இந்த 3வது எம்.பி. இடம்தான் சிதம்பரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேவகவுடாவுடன் ப.சிதம்பரம் பேச்சு

தேவகவுடாவுடன் ப.சிதம்பரம் பேச்சு

அத்துடன் தேவகவுடாவின் ஆதரவை "எப்படியாவது" பெறுவது என்பதும் சிதம்பரத்தின் பொறுப்பும் என்றும் காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தேவகவுடாவுடன் ப.சிதம்பரம் ஆதரவு கோரி பேசியிருக்கிறார். தேவகவுடாவும் ஆதரவு தர ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

விற்பனை செய்யும் கவுடா கட்சி

விற்பனை செய்யும் கவுடா கட்சி

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எப்போதுமே தமது ராஜ்யசபா சீட் "விற்பனைக்கு" என்ற பாணியைத்தான் கடைபிடித்து வருகிறது. இதில்தான் விஜய் மல்லையாவும் ராஜ்யசபா எம்.பி.யானார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

காங். ஆதரவு கோரியது உண்மை- குமாரசாமி

காங். ஆதரவு கோரியது உண்மை- குமாரசாமி

ப.சிதம்பரத்துக்கு ஆதரவு கோரப்பட்டது உண்மைதான் என்பதை தேவகவுடா மகன் குமாரசாமியும் உறுதி செய்துள்ளார். இதனால் கர்நாடக மாநிலத்திலிருந்து சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி.யாவது உறுதியாகி உள்ளது.

English summary
Janata Dal (Secular) is likely to support the Congress Party in the by-election to Rajya Sabha scheduled to be held in June. According to sources, former Union Finance Minister P Chidambaram, who abstained from contesting the Lok Sabha election and fielded his son, P Karthi, is planning to enter into Rajya Sabha from the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X