பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ1.24 குறைப்பு: இன்று காலை முதல் அமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ1.24 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு இன்று காலை 6 மணிமுதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தன.

 Petrol, diesel price cut

இந்நிலையில் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை, இன்று முதல், தினமும் மாற்றுவதென, மத்திய அரசின் எண்ணெய் வினியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ1.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ1.24 குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ69.33க்கு விற்பனை செய்யப்படும். டீசல் விலை லிட்டர் ரூ 59.22க்கு விற்பனை செய்யப்படும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Petrol price slashed by Rs 1.12 per litre, diesel by Rs 1.24 per litre with effect from June 16.
Please Wait while comments are loading...