பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் விலையில், தினமும் மாற்றம் செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, பெட்ரோல் - டீசல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை, நாளை (ஜூன் 16) முதல், தினமும் மாற்றுவதென, மத்திய அரசின் எண்ணெய் வினியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Petroleum Dealers Federation strike announcement cancelled

இதற்கு, அகில இந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 16ம் தேதி முதல், பெட்ரோலியப் பொருட்களை வாங்கவும், விற்கவும் மாட்டோமென, இந்த கூட்டமைப்பு, வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பு நேற்று தெரிவித்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Petroleum Dealers Federation has cancelled its strike announcement today.
Please Wait while comments are loading...