For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் பயன்பாட்டை குறைக்க குறைந்த விலையில் எல்.இ.டி. பல்புகள் வழங்கும் மத்திய அரசு

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: மின்சார பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு மக்களுக்கு மானிய விலையில் எல்.இ.டி. பல்புகளை வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.

மின்சார பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு மக்களுக்கு மானிய விலையில் எல்.இ.டி. பல்புகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு அறிவிக்கும் இடங்களில் எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பெங்களூரில் உள்ள கப்பன் பார்க்கில் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்யப்பட்டன. 9 வாட் எல்.இ.டி. பல்பு ஒன்று ரூ.100க்கு விற்கப்படுகிறது.

Pick up LED bulbs in your state

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பல்புகள் விற்கப்பட்டன. மக்கள் ஆர்வமுடன் பல்புகளை வாங்கிச் சென்றனர். இந்த திட்டத்தின்படி 15 மாநிலங்களில் எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் உள்ள நகரங்களில் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒரு இணைப்பை அளித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

http:///www.delp.in என்ற இணையதளத்திற்கு சென்று மானிய நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகே எங்கு எல்.இ.டி. கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Central government is selling LED bulbs to people at a lesser rate to save energy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X