For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு.. மோடி துவங்கி வைக்கிறார்

டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு.. மோடி துவங்கி வைக்கிறார்

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது இதற்காக எல்லா மாநில முதல்வர்களும் டெல்லி சென்று இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி தலைமை தாங்கி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த கொண்டாட்ட விழாவிற்கு முன் இந்தியா முழுக்க நிறைய நலத்திட்டங்களை உடனடியாக நடந்த மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

PM Modi to inaugurate all state CM meeting in Delhi

இந்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இன்று நாள் முழுக்க இந்த மாநாடு நடக்கும். மாநில வளம், மின்சாரம், வறுமை, கல்வி, தூய்மை இந்தியா திட்டம் , விவசாய பிரச்சனை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

காவிரி பிரச்சனைக்காக டெல்லி சென்று இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், திரிபுரா முதல்வர் பிப்லாப் ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டனர்.

இன்னும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான மாநில முதல்வர்கள் செல்ல இருக்கிறார்கள். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு அதிகரித்து இருக்கும் நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
PM Modi to inaugurate all state CM meeting in Delhi. In this meeting chief ministers from every state will discuss on state issues and people issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X