For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புவிவெப்பமயமாதல்... மோடி கருத்துக்கு எதிர்ப்பு.. பேஸ்புக், டிவிட்டரில் குவிந்த கிண்டல்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: புவிவெப்பமயமாதல், கிளைமேட் சேன்ஜ் என்றெல்லாம் எதுவும் இல்லை. நாம்தான் பூமியை மாற்றி விட்டோம். நாம்தான் மாறி விட்டோம் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு டிவிட்டரில் எதிர்ப்புகளும், கிண்டல்களும் கிளம்பியுள்ளன.

இன்று டெல்லியில் மாணவ, மாணவியர் மத்தியில் மோடி உரை நிகழ்த்தினார். இது நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது கிளைமேட் சேன்ஜ் குறித்தும் மோடி சில கருத்துக்களைத் தெரிவித்தார். அது எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

நாம்தான் மாறியுள்ளோம்

நாம்தான் மாறியுள்ளோம்

கிளைமேட் மாறவில்லை. நாம்தான் மாறி விட்டோம். நமது சகிப்புத்தன்மை மாறி விட்டது. நமது பழக்க வழக்கங்கள் மாறி விட்டன.

கடவுள் பார்த்துக் கொள்வார்

கடவுள் பார்த்துக் கொள்வார்

நாம் மாறினால், கடவுள் அவராகவே நம்மைக் காக்கும் திட்டத்தை வகுப்பார். இயற்கையே தன்னைல நிலைப்படுத்திக் கொள்ளும்.

இயற்கையை நேசிப்போம்

இயற்கையை நேசிப்போம்

இயற்கையை நேசிப்போம். நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வோம் என்றார் மோடி.

டிவிட்டரில் கிண்டல்கள்

டிவிட்டரில் கிண்டல்கள்

மோடியின் இந்தப் பேச்சுக்கு டிவிட்டரில் கிண்டல்களும், எதிர்ப்புகளும் கிளம்பி விட்டன. ஓமர் குரேஷி என்பவர் வெளியிட்ட டிவிட் செய்தியில், நாட்டின் மிகப் பிரபலமான மோடி, கிளைமேட் சேன்ஜ் என்ற ஒன்றே இல்லை என்று கூறுகிறார்... என்று கூறியுள்ளார்.

நிலாவுக்குப் போகப் போகிறார் மோடி

நிலாவுக்குப் போகப் போகிறார் மோடி

சீமா பாஷா என்பவர் வெளியிட்ட டிவிட்டில், பூமியிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, பூமியை விட்டு கிளம்பி நிலாவுக்கு ஹலோ சொல்லப் போகிறாரா மோடி என்று கேட்டுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi's comments appearing to question climate change during a Q and A with schoolchildren across the country today provoked sharp criticism. "Climate has not changed. We have changed...our tolerance and habits have changed. If we change then God has built the system in such a way that it can balance on its own," PM Modi said when a student from Assam expressed concern about climate change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X