For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா போற்றும் எட்டு இசைமேதைகளின் தபால் தலை- குடியரசுத்தலைவர் வெளியீடு!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இசைத்துறையில் சாதனை புரிந்த 8 பேரின் தபால் தலைகளை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இசைத்துறையில் சாதனைப் படைத்த 8 பேரின் தபால் தலையை இன்று வெளியிட்டார். இந்த விழா இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

President Pranab Mukherjee releases commemorative stamps…

இந்திய இசைத்துறையில் சாதனை படைத்த டி.கே பட்டம்மாள், ரவிசங்கர், பிம்சென் ஜோஷி, மல்லியார்ஜுன் மன்சூர், கங்குபாய் ஹங்கல், குமார் கந்தர்வா, உஸ்தாட் விலாயத் கான் மற்றும் உஸ்தாட் அலி அக்பர் கான் ஆகியோரின் நினைவாக தபால்தலை வெளியிடப்பட்டதாக குடியரசுத்தலைவரின் செய்தித்தொடர்பு செயலாளர் வேணு ராஜமோனி தெரிவித்தார்.

"தபால் தலையில் இடம்பெற்றுள்ள இந்த 8 பேரும் இசைத்துறையில் சாதனைப் படைத்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சாதனையை மட்டும் செய்யவில்லை. இசைப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக அவர்கள் அசாதாரணமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்" என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

English summary
President Pranab Mukherjee today released a set of eight commemorative postage stamps featuring renowned Indian classical musicians at a function at Rashtrapati Bhavan here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X