பலாத்காரம் செய்து குழந்தை கொலை.. மன்னிப்பே கிடையாது.. இருவரின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இருவரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். அடுத்த மாதம் அவரின் பதவிக் காலம் முடியும் நிலையில் அவர் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.

இருவரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளதை அடுத்து, நிராகரித்த கருணை மனுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

குற்ற வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்றவர்கள் அதிலிருந்து விடுவிக்க ஜனாதிபதியிடம் முறையிடுவது வழக்கம். கருணை மனுக்களை ஏற்பதோ நிராகரிப்பதோ ஜனாதிபதியின் உரிமை.

குழந்தை பாலியல் செய்து கொலை

குழந்தை பாலியல் செய்து கொலை

குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதே போன்று பொறியாளர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் மற்றொருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் தங்களுக்கு தூக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு செய்திருந்தனர்.

கருணை நிராகரிப்பு

கருணை நிராகரிப்பு

இந்நிலையில், இந்த மனுவை பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். அடுத்த மாதத்தோடு தனது பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

30 ஆக உயர்வு

30 ஆக உயர்வு

இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் பிரணாப் முகர்ஜிதான் அதிகமான கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதன் மூலம் நிராகரிப்பு மனுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

பேரறிவாளன் கருணை மனு

பேரறிவாளன் கருணை மனு

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதி பிரதிபா பாட்டீலால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போன்றே பலரும் தூக்கு தண்டனையில் இருந்து விலக்குக் கோரி ஜனாதிபதியின் கருணைக்காக காத்திருக்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Pranab Mukherjee has rejected 2 mercy petitions in different cases.
Please Wait while comments are loading...