For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 6 மாத பேறுகால விடுப்பு.. லோக்சபாவில் சட்டம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனியார் நிறுவங்களில் வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆறு மாதகாலம் விடுப்பு அளிக்கும் மசோதா நிறைவேற்றபப்ட்டுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: பெண்களுக்கு ஆறுமாதம் பேறு கால விடுப்பு தருவதற்கான மசோதா நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது ஆறு மாதம் பேறுகால விடுப்புக்கு ஏற்கனவே வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் 3 மாதங்கள் மட்டுமே இவ்விடுப்பை வழங்குகின்றன. சிறிய நிறுவனங்களில் இந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை.

Private sector women can avail six months leave

இந்நிலையில் தனியார் நிறுவங்களில் பணிபுரியும் பெண்களும் பயனுறும் வகையில் 6 மாத பேறு கால விடுப்பு அவர்களுக்கும் உண்டு என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

அதன்படி இந்தாண்டில் நாடாளுமன்றம் இரண்டாவது முறையாக நேற்று கூடியது. இன்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டுவிட்டால் தனியார் நிறுவனக்களில் பணிபுரியும் பெண்களும் ஆறு மாதங்கள் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பைப் பெறாலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Providing 6 months maternity leave for women who work in private sector draft was passed in parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X