For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங். தலைவர்களுடன் பிரியங்கா திடீர் ஆலோசனை!: பிரதமர் வேட்பாளராகிறார் ராகுல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரியங்கா காந்தி திடீரென ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 17-ந்தேதியன்று இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

Priyanka Gandhi holds high-level Congress meet; Rahul set to be named PM candidate?

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியாவின் அரசியல் செயலரான அகமது படேல், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர் ஜனார்த்தன் திரிவேதி ஆகியோரும் பங்கேற்றனர். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் லோக்சபா தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் சுற்றுப் பயணம் தொடர்பாகவே இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
In an interesting turn of events, Congress president Sonia Gandhi's daughter Priyanka Gandhi Vadra on Tuesday called a high-level meet of party leaders. The meeting was held at Rahul Gandhi's residence here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X