ஷாக்! மணிப்பூரில் பாஜகவினர் போராட்டம்.. பிரதமர் உருவ பொம்மை எரிப்பு! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் மணிப்பூரில் பிப். 27 மற்றும் மார்ச் 3 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் முடிவுகளும் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 60 சட்டசபை இடங்களைக் கொண்ட மணிப்பூரில் ஆட்சியை அமைக்கக் குறைந்தது 31 இடங்கள் தேவை.

 மணிப்பூர் தேர்தல் களம்

மணிப்பூர் தேர்தல் களம்

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தான் 28 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், 21 இடங்களில் வென்று 2ஆவது பெரிய கட்சியாக இருந்த பாஜக, அங்குள்ள சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைந்தது.

 பாஜகவில் ஐக்கியம்

பாஜகவில் ஐக்கியம்

மணிப்பூர் வரலாற்றில் பாஜக ஆட்சியை அமைப்பது அதுவே முதல்முறையாகும். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக விரும்புகிறது. இதற்காக அக்கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் அம்மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியமாகினர். இது அக்கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளது.

 வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல்

அதற்கேற்ப இந்த முறை மணிப்பூரில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ஏற்கனவே தற்போது பாஜக எம்எல்ஆக்களாக உள்ள 21 பேரில் 19 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 3 பெண்கள் மற்றும் ஒரு முஸ்லீம் வேட்பாளர்களும் பாஜகவின் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், பாஜகவின் இந்த வேட்பாளர் பட்டியல் அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியிலேயே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கடும் கொந்தளிப்பு

கடும் கொந்தளிப்பு

ஏனென்றால் இந்த வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த மணிப்பூர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கோவிந்தாஸ் கோந்தௌஜமும் உள்ளிட்ட 10 பேருக்கு வாய்ப்பளித்திருந்தது பாஜக. இது அக்கட்சியின் நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் இந்த வேட்பாளர் பட்டியலைக் கண்டித்து மணிப்பூரில் பல்வேறு இடங்களிலும் போராட்டமும் வன்முறையும் அரங்கேறி வருகிறது.

 உருவ பொம்பை எரித்து போராட்டம்

உருவ பொம்பை எரித்து போராட்டம்

பாஜக நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களிலும் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இதையடுத்து மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் அமைதியற்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

ராஜினாமா

ராஜினாமா

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பல பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சரியாக எத்தனை நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நபர்கள் போட்டியிடும் இடங்களிலேயே அதிக பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+