யாருக்கு அரசு வேலை? டாஸ் போட்டு முடிவு செய்த அமைச்சர்! வீடியோவால் சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  யாருக்கு வேலை என்பதை டாஸ் போட்டு முடிவு செய்த அமைச்சர்

  சண்டிகர்: பஞ்சாப்பில் அரசு கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு இருவர் போட்டிபோட்ட நிலையில் அமைச்சர் டாஸ் போட்டு முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார்.

  இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை தேர்வு செய்ய அம்மாநில தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. தேர்வு எழுதியவர்களில் 37 பேர் தேர்வாகினர்.

  இருவர் போட்டி

  இருவர் போட்டி

  இதில் பாட்டியாலாவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரே பதவிக்கு இருவர் தேர்வாகிருந்தனர். அதில் ஒருவர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார். மற்றொருவர் அதிக ஆண்டுகள் பயிற்சி பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

  டாஸ் போட்ட அமைச்சர்

  டாஸ் போட்ட அமைச்சர்

  இதனால் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போன பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் சரண்ஜித் சிங் யாருக்கு அரசு வேலையை வழங்குவது என யோசித்தார். இருவரும் சம தகுதியுடன் இருந்ததால் ‘டாஸ்' போட்டு பார்த்துள்ளார்.

  பதவிநீக்கம் செய்ய வேண்டும்

  பதவிநீக்கம் செய்ய வேண்டும்

  இந்த காட்சிகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து பூவா தலையா போட்டு வேலை கொடுத்தவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

  ஒப்புதலுக்கு பிறகே டாஸ்

  ஒப்புதலுக்கு பிறகே டாஸ்

  இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரசு, விரிவுரையாளர் நியமனத்தில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் நோக்கத்திலேயே இவ்வாறு நியமனம் மேற்கொள்ளப்பட்டதாகவும் விரிவுரையாளர்களில் இருவரின் ஒப்புதலுக்கு பிறகே டாஸ் போட்டு நியமனம் செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

  லஞ்சத்தை ஒழித்து உள்ளேன்

  லஞ்சத்தை ஒழித்து உள்ளேன்

  இதுகுறித்து கூறிய அமைச்சர் சரண்ஜித் சிங் முந்தைய பாரதீய ஜனதா, சிரோமணி அகாலி தள கூட்டணி ஆட்சியில் பணி நியமனத்தில் லஞ்சம் தாண்டவம் ஆடியது என்றும் தான்தான் அதை ஒழித்து உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Punjab Minister decided lecturers posting by flips coin. In order to resolve the issue of posting the lecturers, Punjab Technical Education Minister Charanjit Singh Channi decided to toss a coin.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற