மோடி புறக்கணித்தாலும், அத்வானியை அரவணைத்த ராகுல் காந்தி! அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil
  மோடி புறக்கணித்தாலும், அத்வானியை அரவணைத்த ராகுல் காந்தி!

  டெல்லி: அண்ணல் அம்பேத்கரின் 128வது பிறந்த நாள் விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

  Rahul Gandhi accompanies BJP Leader Advani

  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் 128வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

  நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, லோக்சபா சபாநாயகர் சுமிதா மகாஜன், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

  மேலும், இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் பலர் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானியும் வந்து இருந்தார்.

  வயது முதிர்வால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சிரமப்பட்டு நடந்து வந்த அத்வானியை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அரவணைத்து அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த அழைத்துச் சென்றார். அப்போது மாநிலங்களவை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா உடன் இருந்தார்.

  திரிபுராவில் முதல்வர் பிப்லாப் தேவ் பதவியேற்பு விழாவில் கும்பிட்டு வணக்கம் சொன்ன அத்வானியை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் புறக்கணித்தது தொடர்பான வீடியோ வைரலாகியிருந்தது. ஆனால், அத்வானியை ராகுல் காந்தி அரவணைத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rahul Gandhi accompanies BJP Leader Advani on Dr BR Ambedkar's 128th Birthday Event. President, PM and other Important Leaders paid their tribute to BR Ambedkar Today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற