சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - ட்விட்டரில் ராகுல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலமாக இருப்பதாக ட்விட்டரில் ராகுல்காந்தி தெரிவித்து இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த சோனியா காந்தி, வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில், சிம்லா சென்றிருந்த சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உடனடியாக டெல்லி அழைத்துவரப்பட்டார் சோனியா.

Rahul Gandhi tweets about Sonia's Health Condition

டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

சோனியாவின் உடல்நிலை குறித்து ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ' சிம்லாவில் இருந்த சோனியா காந்திக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது. எனவே, அவரை டெல்லி அழைத்துவந்தோம். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சோனியா காந்தி நன்றாக உள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rahul Gandhi tweets about Sonia's Health condition. In the recent tweet he says that, Sonia is fine and good. A small stomach bug and nothing to worry and says Thanks for the love and care

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற