For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”மம்மி…நான் லோக்சபாவுக்கு போகமாட்டேன்”- ராகுலின் மோசமான வருகை பதிவு

Google Oneindia Tamil News

டெல்லி : நாடாளுமன்றத்திற்கு சரியாக வராதவர்கள் பட்டியலில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு முக்கியமான இடம் கிடைத்துள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 15 வது லோக்சபா கூட்டத்தின் எம்.பி.க்களின் அட்டென்டண்ஸ் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக மோசமான அட்டென்டண்ஸ் வைத்திருக்கும் 30 எம்.பி.க்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலும் ஒருவர்.

அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 545 உறுப்பினர்களில் 30 எம்.பி.,க்கள் அவைக்கு சரியாக வராமலும், வந்தாலும் வாய் திறக்காமலும் இருந்துள்ளனர்.

42% அட்டென்டண்ஸ்

42% அட்டென்டண்ஸ்

ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட விவரங்களின்படி பிப்ரவரி 17 வரை ராகுல் வெறும் 42 சதவீதம் அட்டென்டண்ஸ் மட்டுமே வைத்துள்ளார்.

76% சராசரி

76% சராசரி

இது சராசரி அளவான 76 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

உ.பி.எம்.பிக்கள் 80%

உ.பி.எம்.பிக்கள் 80%

ராகுலின் சொந்த தொகுதி இருக்கும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதிகபட்சமாக 80 சதவீதம் அட்டென்டண்ஸ் வைத்துள்ளனர்.

2 விவாதத்தில் மட்டுமே ராகுல்

2 விவாதத்தில் மட்டுமே ராகுல்

மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற லோக்சபாவின் கடைசி கூட்டத் தொடரில் தினமும் பல்வேறு விவாதங்கள் நடத்தபட்டது. இதில் 2 விவாதங்களின் போது மட்டுமே ராகுல் கலந்து கொண்டுள்ளார்.

லோக்பாலை தவிர..

லோக்பாலை தவிர..

அவைக்கு வந்த சமயத்திலும் கேள்வி ஏதும் கேட்கவும் இல்லை,தனிநபர் மசோதா எதையும் தாக்கல் செய்யவும் இல்லை. அவையில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் லோக்பால் மசோதாவில் மட்டுமே ராகுலின் தலையீடு இருந்துள்ளது.

100% அட்டென்டன்ஸ் எம்..பிக்கள்

100% அட்டென்டன்ஸ் எம்..பிக்கள்

அதே நேரத்தில் டி.கே.சுரேஷ், கே.பி.தனபாலன், பிரதிபா சிங் மற்றும் ரமேஷ் குமார் ஆகிய காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் 100 சதவீதம் அட்டென்டண்ஸ் வைத்துள்ளனர்.

English summary
Parliament's 15th session ended yesterday. M.P’s attendance list released. On that list Raghul get placed in bad attendance M.P’s row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X