டெல்லியில் ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி ரயில் நிலையத்தில் ஜம்மு - டெல்லி சென்ற ராஜ்தானி ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இன்று காலை 6:20 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது கடைசிப் பெட்டி தடம்புரண்டு விபத்துள்ளானது. இந்த ரயில் விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Rajdhani Express coach derails in Delhi Railway Station

தடம் புரண்ட ரயில் பெட்டியை சீர் செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக தொடர் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அன்று ராஞ்சி விரைவு ரயில் டெல்லியில் உள்ள மின்டோ பாலம் அருகில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தகது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A coach of Jammu Tawi-New Delhi Rajdhani Express derailed on Thursday at the New Delhi Railway station.
Please Wait while comments are loading...