ராஜ்யசபா தேர்தல்: நான் காங்கிரஸுக்கு ஓட்டு போடவில்லை... வகேலா அதிரடி- அகமது படேல் தோல்வி முகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ராஜ்பசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான அகமது படேலுக்கு தாம் வாக்களிக்கவில்லை என அக்கட்சியில் இருந்து விலகிய முதுபெரும் அரசியல் தலைவர் சங்கர்சிங் வகேலா அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் அகமபது படேல் தோல்வியை தழுவவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷா, ஸ்மிருதி இரானி

அமித்ஷா, ஸ்மிருதி இரானி

குஜராத்தில் 3 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. சட்டசபை பலத்தின் அடிப்படையில் ஆளும் பாஜகவின் வேட்பாளர்களான அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி உறுதியானது.

அகமது படேல்

அகமது படேல்

3-வது இடத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் களமிறக்கப்பட்டார்.

வகேலா தடாலடி

வகேலா தடாலடி

இதனால் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது. இதனிடையே ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. வாக்களித்துவிட்டு வெளியே வந்த வகேலா செய்தியாளர்களிடம் கூறுகையில், அகமது படேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதனால் என்னுடைய வாக்கை வீணாக்க விரும்பவில்லை. அகமது படேல் வெல்வதற்கான எந்த் ஒரு நடவடிக்கையையுமே காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை என்றார்.

Gujarat Assembly elections: Congress
அகமது படேல் தோல்வி?

அகமது படேல் தோல்வி?

ராஜ்யசபா தேர்தலில் வெல்ல 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. காங்கிரஸுக்கு இந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இருந்தபோதும் இவர்களில் பலரும் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறி வருகின்றனர். இதனால் தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் அகமது படேல்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Shankersinh Vaghela, who quit the Congress said today that he hadn't voted for the party's Ahmed Patel in the Rajya Sabha election,
Please Wait while comments are loading...