For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்த கட்டணத்தில் டி.டி.ஹெச் சேவை.. ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்

செல்போன் சேவை, இணையதள சேவை என்று கொடி கட்டி பறந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது டிடிஎச் சேவையிலும் கால் ஊன்ற திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: கடந்த 6 மாதங்களாக இலவச இணையதள சேவைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது செட் டாப் பாக்ஸ்கள் மூலம் குறைந்த செலவிலான டிடிஎச் சேவை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2005-ஆம் ஆண்டுகளில் புதிய செல்போன்களையும், செல்போன் சேவைகளையும் குறைந்த விலையில் வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இலவச கால் சேவைகளையும், டேட்டா வசதிகளையும் தொடங்கியது.

Reliance Jio set-top box leaked online, DTH services coming soon?

இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், இணையதள சேவையை சோதிப்பதற்காகவும் முதல் 3 மாதங்களுக்கு அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கியதை தொடர்ந்து மேலும் 3 மாதங்களுக்கு இலவசங்கள் நீட்டிக்கப்பட்டது.

அது முடிவடைந்த நிலையில் குறைந்த டாஃரீப் ரேட்டுகள் கொண்ட ஜியோ பிரைம் திட்டத்தை தொடங்கியது. இந்நிலையில்ரிலையன்ஸ் ஜியோ என்ற பெயரிலான செட்-டாப் பாக்ஸ்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியுள்ளன. இதனால் டிடிஎச் சேவைகளிலும் கால்பதிக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது.

அதாவது 360-க்கும் மேற்பட்ட சேனல்களை செட் டாப் பாக்ஸ் மூலம் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அவற்றுள் 50 சானல்கள் ஹெச்.டி. சானல்களாகும். இவற்றை குறைந்த அளவில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே இலவசமாகவும், குறைந்த செலவிலும் வாய்ஸ் கால்களையும், டேட்டாக்களை வழங்கியுள்ளதால் தங்கள் வர்த்தம் பாதிக்கப்படுவதாக வோடஃபோன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Reliance Jio is preparing to enter in to the DTH (Direct to Home) service space, with more than 360 channels of which 50 are HD channels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X