For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு.. ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்.. ஆர்பிஎப் படைக்கு லீவு ரத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    12,000 போலீஸ் குவிப்பு... அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு

    டெல்லி: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பணிக்காலம் வரும் 17ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ராமஜென்மபூமி - பாபர் மசூதி குறித்த தீர்ப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.

    இந்நிலையில் மும்பை, டெல்லி மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள 78 பெரிய ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில்நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

    அயோத்தி முழுவதும் துணை ராணுவம் குவிப்பு.. 20 தற்காலிக சிறைகள் அமைப்பு.. உச்ச கட்ட பரபரப்புஅயோத்தி முழுவதும் துணை ராணுவம் குவிப்பு.. 20 தற்காலிக சிறைகள் அமைப்பு.. உச்ச கட்ட பரபரப்பு

    பாதுகாப்பில் ரயில்வே பாதுகாப்புப் படை

    பாதுகாப்பில் ரயில்வே பாதுகாப்புப் படை

    வரும் 17ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அதற்குள்ளாக அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தீர்ப்பு வெளியானவுடன் கலவரங்கள் நிகழ வாய்ப்புள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

    ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

    மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசங்களில் முக்கிய ரயில்நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விடுப்புகளை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பாதுகாப்பு அதிகரிப்பு

    பாதுகாப்பு அதிகரிப்பு

    ரயில்நிலையங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், பாலங்கள் போன்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    17ம் தேதிக்கு முன்பு தீர்ப்பு

    17ம் தேதிக்கு முன்பு தீர்ப்பு

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், ராமஜென்ம பூமி - பாபர் மசூதி குறித்த தீர்ப்பு அதற்குள்ளாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரயில்வே பாதுகாப்புப் படை அதிகரிப்பு

    ரயில்வே பாதுகாப்புப் படை அதிகரிப்பு

    இன்னும் சில தினங்களில் அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், ரயில்நிலையங்களை ஒட்டியுள்ள கோயில்கள் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் நிர்வாகிகளும் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    மண்டலங்களுக்கு அறிவிப்பு

    மண்டலங்களுக்கு அறிவிப்பு

    ரயில்கள் வராத நேரங்களில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்வகையில் 30 சதவிகித லைட்டுகளை மட்டுமே உபயோகிக்க ரயில்நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 100 சதவிகித லைட்டுகளையும் உபயோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

    உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

    இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் குறிப்பாக அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினரை பாதுகாப்புப் பணியில் உள்துறை அமைச்சகம் ஈடுபடுத்தியுள்ளது.

    English summary
    RPF has Cancelled leave to its personnels due to the Ayodhya verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X