பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு- வீடியோ

  டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ. 2548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இரண்டாவது முறையாக ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட் ஒன்றாக கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

  Rs. 2500 crores released for TN rail services in Budget 2018

  இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கான எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ரயில்வே துறைக்கான நிதியிலும் எந்த திட்டங்களுக்கு எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று கூறாமல் மொத்தமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  இந்நிலையில் தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்களுக்காக ரூ.2548 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 48 கி.மீ. தூர ஓசூர்- பயப்பனஹள்ளி (பெங்களூர்) இரட்டை அகல ரயில் பாதை திட்டத்துக்கு ரூ. 376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ஏற்கெனவே கிடப்பில் போடப்பட்டுள்ள, தொடங்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rs. 2548 crores released for TN rail services in Budget 2018. Central government releases fund for all the states separately.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற